உலக சுற்றாடல் வாரத்தினை முன்னிட்டு பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீள் எழுச்சித்திட்டத்தினூடாக திராய்க்கேணி கிராம அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று (09.06.2013) திராய்க்கேணி ஸ்ரீ மாரியம்மன் கோயில் வளாகம் சிரமதானம் செய்யப்பட்டது.
கிராம அபிவிருத்தி அமைப்பின் தலைவர் ரீ. யோகநாதன் தலைமையில் நடைபெற்ற இச்சிரமதான நிகழ்வில் மீள் எழுச்சித் திட்ட அம்பாரை மாவட்ட பிரதித் திட்டப் பணிப்பாளர் திஸ்ஸ பல்லேகும்புர பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிரமதானப் பணியினை ஆரம்பித்து வைத்தார்.
இதன்போது சமூக வலுவூட்டல் இணைப்பாளர் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டனர். இச்சிரமதானத்தினை தொடர்ந்து கோயில் வளாகத்தில் மர நடுகை சேதனைப்பசளை தயாரிக்கும் முறை மற்றும் அதன் அவசியம், சூழலைப் பாதுகாத்தல், உணவு வீன்விரயமாவதைத் தடுத்தல் போன்ற பல்வேறு நிகழ்வுகளும் நடைபெற்றது.






0 comments :
Post a Comment