பஸ் கட்டண உயர்வு குறித்து பேச்சுவார்த்தை வேண்டும்.

ஸ் கட்டண உயர்வு குறித்த தீர்மானமிக்க பேச்சுவார்த்தை ஒன்று எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறும் என தனியார் போக்குவரத்து அமைச்சர் சிபி.ரத்நாயக்க தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்து சபை, மாகாண போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் பஸ் சங்க உறுப்பினர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

பஸ் கட்டண உயர்வு குறித்து மட்டுமன்றி நேர்த்தியான போக்குவரத்து சேவை, ஒன்றிணைந்த கால அட்டவணை உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இங்கு பேசப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

எனினும் பஸ் கட்டண உயர்வு குறித்து பேச சம்பந்தம் இல்லாத நபர்களை அழைத்துள்ளமைக்கு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :