பொதுபல சேனாவை வைத்து கல்முனையில் அரசியல் பிழைப்பை நடாத்துகிறார்கள் சிலர்.


ங்குரோத்து நிலையில் உள்ள சில அரசியல்வாதிகள் தம்மை வீரர்களாக காட்டுவதற்காகவே கல்முனையில் பொதுபலசேனா கூட்டம் நடத்தவிருப்பதாக புரளிகளை அவிழ்த்து விட்டுள்ளார்கள் என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

இது பற்றி அவர் தெரிவித்துள்ளதாவது, கல்முனையில் பொதுபல சேனாவின் கூட்டம் ஒன்றை நடாத்துவதற்கு அவர்கள் கல்முனை பொலிசாரிடம் எழுத்து மூலம் எத்தகைய கோரிக்கையையும் முன்வைக்கவில்லை என பொலிஸ் தரப்பில் உறுதியாக கூறப்படுகிறது. 

அத்துடன் கல்முனை மாநகர சபையிடமும் இத்தகைய கோரிக்கையை எவரும் முன் வைக்கவில்லை என கல்முனை மேயரும் கூறியள்ளார்.

இந்த நிலையில் கல்முனையில் பொது பல சேனாவின் கூட்டம் நடக்கவிருப்பதாக பொது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த முயற்சித்தவர்கள் யார் என்பது அவசியம் கண்டறியப்பட வேண்டும். சில வங்குரோத்து அரசியல்வாதிகளின் நன்மைக்காகவே இத்தகைய புரளி கிளப்ப்பப்பட்டுள்ளது என்பது வெளிச்சமாகியுள்ளது.
அரச ஒத்துழைப்புடன் முஸ்லிம்களின் பல உரிமைகளை அசிங்கப்படுத்திய பொதுபல சேனாவுக்கெதிராக ஒரு பகிரங்க கூட்டத்தை தமது தலைவரின் பிரசன்னத்துடன் கல்முனையில் நடத்த முடியாத முஸ்லிம் காங்கிரசின் அரசியல்வாதிகள் சிலரே பொதுபலசேனா கல்முனையில் கூட்டம் நடத்தப்போவதாக புரளியை கிளப்பி மக்களை பதற்றமடைய வைத்து விட்டு பின்னர் தமது முயற்சியாலேயே கல்முனை கூட்டம் நடைபெறவில்லை என ஊடகங்களுக்கும் அறிவித்துள்ளார்கள்.

அம்பாறையில் கூட்டம் நடத்திய பொது பல சேனா அங்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பற்றியும் அவரே கல்முனையில் தமது கூட்டம் நடத்த விடாது தடுத்தார் எனவும் கூறியதாக வெளி வந்த செய்திகளில் உண்மை இருப்பதாக தெரியவில்லை. இக்கருத்தை சிங்கள ஊடகங்களில் காண முடியவில்லை.
இவ்வாறு பொதுபல சேனாவை வைத்து முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது அரசியல் வயிற்றுப்பிழைப்பை நடத்தி வருகிறார்கள் என்பது கூடிய சீக்கிரத்தில் தெரியவரும் எனவும் முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :