ஒழுக்கமுள்ள ஒரு சமுதாயத்தை உருவாக்கும் பணியினையே மத்ரஸாக்கள் மேற்கொண்டுள்ளன


டிப்படைவாதத்தையும் இனவாதத்தையும் முஸ்லிம் சிறார்கள் மத்தியில் தூண்டும் விதத்தில் அரபு மத்ரஸாக்களும் கல்லூரிகளும் செயற்படவில்லை. 

ஒழுக்கமுள்ள ஒரு சமுதாயத்தை உருவாக்கும் நல்ல பணியினையே அரபு மத்ரஸாக்களும் கல்லூரிகளும் மேற்கொண்டுள்ளன என இலங்கை அரபுக் கல்லூரிகளின் ஒன்றியம் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைப்பின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எஸ்.ஏ.எம். ஜவ்பர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அரபு மத்ரஸாக்கள் சனத்தொகையின் அதிகரிப்புக்கும் மார்க்கத்தை படிப்பவர்களின் அதிகரித்துவரும் ஆர்வத்துக்கும் இயைபாகவே அதிகரிக்கின்றன. இந்த மத்ரஸாக்களும் கல்லூரிகளும் அரபுக்கல்லூரிகளின் ஒன்றியத்தின் கீழேயே இயங்கி வருகின்றன. ஒன்றியம் அரசாங்கத்தின் சட்டதிட்டங்களுக்கு அமைய பதிவு செய்யப்பட்ட நிறுவனமாகும்.

பெளத்தசாசன அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் அமைச்சினால் மத்ரஸா அரபுக்கல்லூரிகளின் பாடத்திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அதற்கிணங்கவே போதனைகள் இடம்பெறுகின்றன.

அரபுக்கல்லூரிகள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டவைகள் அல்ல. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இக்கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இக்கல்லூரிகள் அரசின் சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே இயங்கி வருகின்றன என்றும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :