எம்பிலிபிட்டி - தொரகொல்யாய - ஹிக்தலுக்ஹின்ன பகுதியில் கஞ்சா தோட்டம் வைத்திருந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். எம்பிலிபிட்டி பொலிஸார் நேற்று (13) இரவு மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் 4000 கஞ்சா செடிகள் அடங்கிய கஞ்சா தோட்டம் ஒன்றை வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் இன்று (14) எம்பிலிபிட்டி நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.
0 comments :
Post a Comment