செய்தியாளர்களின் கூட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் விசாரணைகள்.


(சுஜான்)

ம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் விசேட கூட்டம் நேற்று
ஞாயிற்றுக்கிழமை (23) ஜனாதிபதி விளையாட்டு பயிற்சி நிலைய கேட்போர்
கூடத்தில் சம்மேளனத்தலைவர் மீரா எஸ். இஸ்ஸடீன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பே இராணுவத்தினர் குறிப்பிட்ட
இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

இக்கூட்டத்தில் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும்
சம்மேளனத்தின் வருடாந்த மாநாடு நடாத்துவது பற்றிய முக்கிய விடயங்கள்
பற்றியே ஆராயப்பட்டது.

இதேவேளை, அன்றைய தினம் தேசிய சுதந்திர ஊடகவியலாளர் அமைப்பின் தலைவர்
எம்.எஸ்.எம். ஜஃபர் தலைமையில் பொத்துவில் அறுகம்பை ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர்களின் தொழில்வாண்மை விருத்தி பயிற்சி செயலமர்விலும் NIB இனரால் விசாரணைகள் இடம்பெற்றுள்ளது.

இவ்விரு அமைப்பினரும் துறைசார்ந்த விடயங்களுக்காகவே ஒன்று கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :