காத்தான்குடி நகர சபை தலைவர் மற்றும் அதன் உறுப்பினர் ஆகியோர் இன்று சரீரப் பிணையில்.

காத்தான்குடி நகர சபை தலைவர் மற்றும் அதன் உறுப்பினர் ஆகியோர் இன்று சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் மற்றும் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எம்.எஸ்.ஸியாத் ஆகிய இருவருக்கும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் கடந்த 18ஆம் திகதி பிடியானை பிறப்பித்திருந்தார்.

காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் ஜும் ஆ பள்ளிவாயலுக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படும் மையாவாடிக் காணிக்குள் கட்டிடம் கட்டுவதற்காக காத்தான்குடி நகர சபை அந்த காணியினை வேலி போட்டு அடைத்த வழக்கு தொடர்பில் இவர்களுக்கு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அதற்கிணங்க காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் மற்றும் அதன் உறுப்பினர் எம்.எஸ்.ஸியாத் ஆகிய இருவரும் சமூகமளிக்கத்ததால் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி இவர்கள் இருவருக்கும் கடந்த 18ம் திகதி பிடியானை பிறப்பித்தார்.

இந்த நிலையில் இன்று (24) காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் மற்றும் நகர சபை உறுப்பினர் எம்.எஸ்.சியாத் ஆகிய இருவரும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லா முன்னிலையில் ஆஜராகினர்.

இதன்போது காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் மற்றும் நகர சபை உறுப்பினர் எம்.எஸ்.சியாத் ஆகிய இருவரையும் தலா ஐந்து இலட்சம் ரூபா சரீரப்பிணையில் செல்ல அனுமதித்த நீதிபதி எதிர்வரும் 2ம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :