பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதலில் காயமடைந்த வில்கமுவ பிரதேச சபைத் தலைவர் ஜயந்த வீரசேகர வில்கமுவ - ஹெட்டிபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வில்கமுவ - ஹந்துன்கமுவ பகுதியில் இன்று (11) பகல் இடம்பெற்ற ´திவிநெகும´ திட்டத்தில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிளைடால் வெட்டப்பட்டதாகக் கூறப்படும் வெட்டுக் காயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் ஹெட்டிபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரதேச சபைத் தலைவரை தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 2.30 அளவில் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலுடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

0 comments :
Post a Comment