மாணவர்கள் தூய எண்ணத்துடன் செயற்பட்டால் சிறந்த ஆளுமை உருவாகும்-ஆரிப் சம்சுடீன்

( எஸ்.அஷ்ரப்கான் )

மாணவர்கள் தூய எண்ணத்துடன் செயற்படும் போதுதான் அவர்களிடையு சிறந்த ஆளுமைஉருவாகும். இவ்வாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் குறிப்பிட்டார்.

இன்று (24) காலை கல்முனைக்குடி அல் பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றகணினி நிலையத்திற்கான அடிகல் நடும் விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டுஉரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றும்போது குறிப்பிட்டதாவதூ:-நவீன யுகத்தின்சவால்களுக்குமுகம்கொடுக்கும்வகையில்மாணவர்கள்தயார்படுத்தப்பட வேண்டும்.

 கணினி உபயோகத்தின் தேவை இன்று நம்மிடையே
பிண்ணிப்பிணைந்ததாக மாறிவிட்டது. கணினி அறிவின் அவசியம் எல்லோராலும்உணரப்பட்டுள்ள நிலையில், நமது பிரதேச மாணவர்களும் அதன் பயனை அடையக்கூடியவர்களாக மாற வேண்டும். இப்பாடசாலை மாணவர்களின் கணினி அறிவை வளர்க்கும்நோக்குடன் இன்று இக்கணினி நிலையத்துக்கான அடிக்கல் நடப்பட்டுள்ளது.

எல்லா அரசியல் வாதிகளும் பல்வேறு அபிவிருத்தித்திட்டங்கள் என்று கூறி கற்களைநடு;கிறார்கள். பின்னர் அந்த இடத்தில் கல்வைத்த தடயமே இல்லாமல்போய்விடுறது. இந்;தக் கலாசார்தை நான் செய்ய விரும்பவில்லை. 

மக்களைஏமாற்றும் நோக்கமும் எனக்கில்லை. நூறு அடிக்கற்களை வைப்பதை விட ஒரு கல்லைவைத்துவிட்டு அந்த இடத்தில் உரிய வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதுதான் எனது ஆசை.அந்தவகையில் இ;ப்பாடசாலைக்குஇந்தக்கணினிநிலையத்தைகொண்டுவருவற்கானநிதியப் பெற்றமையானதுபுதையல்தோண்டிஎடுத்தஒருஅனுபவமேஎன்னுள்
பேசிக  கொண்டிக்கிறது,

அத்தகையதொரு பிரயத்தனத்தின் மத்தியில் இப்பாடசாலையில் ஒரு கணினி நிலையம்உருவாக வேண்டும் என்ற தூய எண்ணத்துடன் முன்னெடுக்கப்பட்டுள்ள இத்த கணினிநிலையத்துக்கான பணிகள் இன்னும் ஒரு மாதத்துக்குள் நிறைவு செய்யபடும் என நிர்மாணஒப்பந்தக்காரர்கள் உறுதியளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இப்பாடசாலை மாணர்களின் பரீட்சை அடைவு மட்டங்கள் இப்பிரதேசத்தின் ஏனையபாடசாலைகளின் மாணவர் தேர்ச்சியுடன் ஒப்பிடும்போது குறைந்த நிலையிலுள்ளதாகஅறியமுடிகிறது.இந்நிலையிலிருந்துமுன்னெற்றகரமானதொரு நிலை இப்பாடசாலையில்உருவாக வேண்டும்.

 அதற்கு இப்பாடசாலை அதிபர் முதல் அசிரியர்கள் மற்றும் பாடசாலைஅபிவிருத்திச் சங்கம் என்பன ஒன்றினைந்து செயற்படுவீர்கன் என்று நம்புகின்றேன்என்று கூறிய அவர் இப்பாடசாடலையின் கல்வி விருத்தியில் எனது அக்கறைதொடர்ந்தும்இருந்து வருமென்றார்.

இவ்விழாவில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் யு.எல்.எம். ஹாசிம். கல்முனைபிரதேச செயலாளர் எம்.எம். நௌபல், மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கஉறுப்பினர்கள,; பெற்றோர் ஆசிரியர் மாணவர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :