அம்பாறை பிரதான போக்குவரத்துப் பாதைகளில் மாடுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

(எஸ்.அஷ்ரப்கான்)
அம்பாறை மாவட்டத்திலுள்ள பிரதான போக்குவரத்துப் பாதைகளிலும் சந்தைப்பிரதேசங்களிலும்

கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வீதிவிபத்துக்கள் மற்றும் வாகன போக்குவரத்து நெரிசல்களும் அதிகரித்துள்ளன எனபொதுக்களும், வாகன சாரதிகளும், வியாபாரிகளும் கவலை தெரிவிக்கின்றனர்.
அம்பாறைமாவட்டஇறக்காமம்,அக்கரைப்பற்று,ஆலையடிவேம்பு,திருக்கோவில்,பொத்துவில்,அட்டாளைச்சேனை,நிந்தவூர்,சம்மாந்துறைமற்றும்காரைதீவு,மாளிகைக்காடு,சாய்ந்தமருது,கல்முனைஆகியபிரதேசங்களுக்குட்பட்டபிரதானபாதைகளிலேயேஇக்கட்டாக்காலிமாடுகளின்தொல்லைநாளுக்குநாள்அதிகரித்துக்காணப்படுவதுடன்வாகனபோக்குவரத்திற்கும்இதுவொருபெரும் தடையைஎற்படுத்துவதாக சாரதிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேலும் இக்கட்டாக்காலிகள் சந்தைப் பிரதேசங்களை அசுத்தமாக்கி வருவதுடன்விற்பனைக்காக வைக்கப்படும் காய்கறி வகைகளையும் தின்றுவிடுகின்றன எனவும்சந்தை வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதேவேளை இரவு நேரங்களில் பிரதான வீதியோரங்களிலுள்ள பஸ் தரிப்பு நிலையம்,வியாபார நிலையம் போன்றவற்றை அசுத்தமாக்கி பிரதான பாதைகளில்இருள்சூழ்ந்தஇடங்களில்படுக்கையைஅமைத்துக்கொள்வதனால் இரவுநேரங்களில்மிகவேகமாகவாகனங்களைசெலுத்திவருகின்றசாரதிகள்இக்கட்டாக்காலிகள்மீதுமோதுண்டுபாரியவிபத்துக்களையும்சந்தித்துவருகின்றனர். இதனால் பாரிய உயிர்மற்றும் பொருள் தேசங்கள் ஏற்பட்டு வருகின்றன.

எனவே குறிப்பிட்ட பிரதேசங்களின் பிரதேச சபை தவிசாளர்கள், மாநகர
முதல்வர்கள்மற்றும்பிரதேசசெயலாளர்கள்,பொலிசார்இணைந்துஇதுதொடர்பானநடவடிக்கையினைமேற்கொள்ளவேண்டும்எனசாரதிகளும்,வியாபாரிகளும்,பொதுமக்களும் கோரிக்கைவிடுக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :