சவூதி அரேபிய மன்னர் அப்துல்லாவின் எச்சரிக்கை!

சில நாடுகள் தொடர் ஆபத்தான முயற்சிகளை மேற்கொள்வதோடு மற்றைய நாடுகளின் உள்விவகாரங்களிலும் தலையிடுகிறார்கள், இது பிராந்தியத்தில் பதற்றத்தினையும் உறுதியற்ற நிலைப்பாட்டினையும் உருவாக்கும்” என்று இரு புனித ஹரம் ஷரீபின் பொறுப்பாளரான மன்னர் அப்துல்லா நேற்று எச்சரித்தார்.

சிரியாவில் தொடரும் படுகொலைக்களரி, மனித உரிமைகளுக்கு எதிரான பரவலான அத்துமீறல்கள், அம்மக்களுக்கு எதிரான ஆயுத நடவடிக்கைகள் ஆகிய நிகழ்ச்சிகளின் விளைவுகள் பற்றி மீளாய்வு செய்யப்பட்டது.

சர்வதேச இஸ்லாமிய ஊடக அமைப்பின் பொதுச்செயலாளர் ஹசன் அஹ்தாழ் மன்னரின் இவ்வறிக்கையினை வரவேற்றதுடன் “இது இஸ்லாமிய உலகின் சமாதானத்தினையும், பிராந்திய ஒருமைப்பாட்டினையும் பலப்படுத்தும் ஒரு பிரதிபலிப்பு” என்று குறிப்பிட்டார்.

அரபு செய்திக்கு கருத்து தெரிவித்த அவர், ஹிஸ்புள்ளாவினதும் ஈரானின் ஆயுதரீதியான உதவியும் சிரியாவில் தொடரும் வன்முறைகளை தூண்டிவிடுகின்றது.இது அப்பிராந்தியத்தின் எல்லா பகுதியிலும் ஸ்திரமற்ற நிலையை உண்டாக்குவதுடன் பதற்றநிலையும் உண்டு பண்ணுகிறது.

புதிய ஜனாதிபதி சீர்திருத்தவாதி ஹசன் ரவ்ஹாணி இன் தலைமையில் சிரியாவிற்கான ஈரானின் அரசியல் கொள்கை மாற்றத்தினை சவூதி வரவேற்கிறது என்றார் அஹ்தாழ்.”நாங்கள் ஹசன் ரவ்ஹாணியிடமிருந்து சிரியாவிற்கான ஜனநாயகத்தினையும் அறிவு சார்ந்த ஒரு நிலைப்பாட்டினையும் எதிர்பாக்கிறோம்.பசார் அல்- ஆசாத் தனது மக்களை தானே கொன்று குவிக்கின்றார்” எனக்குறிப்பிட்டார்.

அதிகரித்த ஹஜ் பயணிகளை உள்வாங்குமுகமாக இரு புனித தலங்களை விஸ்தரிக்கும் இந்த முயற்சியை இரட்டிப்பாக்குமாறும் அதற்கான அனைத்து வளங்களையும் பாவித்து துரிதப்படுத்துமாறும் அதிகாரசபைகளை மன்னர் அப்துல்லா வேண்டிக்கொண்டார்.

இந்த இரு மஸ்ஜித்களின் கட்டிட விரிவாக்கம் பற்றியும், “மத்தாப்” ( கஹ்பாவைச் சுற்றியுள்ள தவாப் செய்யும் பரிதி வடிவ பகுதி) பற்றியும் மதீனாவின் புனித சூழல் விஸ்தரிப்பு பற்றியும் அமைச்சரவையில் கலந்தாலோசிக்கப்பட்டது என கலாச்சார தகவல்கள் அமைச்சர் அப்துல் அஸீஸ் ஹோஜா தெரிவித்தார்.

புனித மக்கா ஹரம் ஷரீப் 2.2 மில்லியன் மக்கள் சுற்று வளம் வருமளவு விஸ்தரிக்கபடுவதுடன் புனித நபியவர்களின் மஸ்ஜிதுன் நபவி ஒரே நேரத்தில் 2 மில்லியன் மக்கள் தொழும் அளவு விஸ்தரிக்கப்படும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :