இளைய தளபதி விஜய்- அமலாபால் இணைந்து நடித்துள்ள படம் தலைவா வெளியீடு.


ளைய தளபதி விஜய்- அமலாபால் இணைந்து நடித்துள்ள படம் தலைவா.இயக்குனர் ஏ.எல். விஜய்யின் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பாடல் வெளியிட்டு விழா நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது.அப்போது பேசிய அமலா பால், தலைவா படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தது பெருமையாக உள்ளது.

ஒவ்வொரு நடிகைக்கும் விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்பது கனவு.தலைவா படத்தின் மூலம் என்னுடைய கனவு நிறைவேறி உள்ளது.
விஜய் மிக இனிமையானவர், அன்பாக பேசி பழகுவார்.

திறமையானவர்களை கொண்டு உருவாகியுள்ள இப்படம், நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.ஏற்கனவே ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தெய்வ திருமகள் படத்தில் நடித்தேன்.இதில் நடித்ததும் நல்லதொரு அனுபவத்தை தந்தது என தெரிவித்துள்ளார்.

விழாவில் தயாரிப்பாளர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், ஏ.எல்.அழகப்பன், நடிகை சரண்யா,இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :