ஏ.எல்.எம்.நயீம்
கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்கள் அண்மையில் பட்டிருப்பு தேர்தல் தொகதியில் உள்ள களுவாஞ்சிக்குடி பிரதேசத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டார்.
களுவாஞ்சிக்குடி விவசாய திணைக்களத்திற்கு விஜயம் செய்த அமைச்சரோடு கிழக்கு மாகாண சபையின் தமிழ் கூட்டமைப்பு உறுப்பினர்களான ஜி.கிறிஸ்ணபிள்ளை (வெள்ளிமலை), எம்.நடராஜா, ஜே.ஜனார்த்தனன், அமைச்சின் செயலாளர் கே.பத்மநாதன் உட்பட அமைச்சின் அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய கிழக்கு மாகாண தமிழ்க் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்கையில் அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இன மத பேதமின்றி சேவையாற்றி வருவதாகவும், மாகாண சபையில் முதலமைச்சர் ஒருவரை மீண்டும் நியமிப்பது என்றால் அதற்கு பொருத்தமானவர் ஹாபிஸ் நசீர் அஹமட் என்பதை தெரிவித்துக் கொள்வதோடு தங்களது பூரண ஆதரவையும் வழங்கத் தயாராக உள்ளதாகவும் கூறினார்.
மேலும் அமைச்சர் பண்ணையாளர்களது குறைகளை கேட்டறிந்ததோடு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் விரைவில் பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் முழுநாள் அமைச்சின் நடமாடும் சேவை ஒன்றை நடத்த முடிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் தமிழ் கூட்டமைப்பு உறுப்பினர்கள் விஜயத்தின் நினைவாக கமநல சேவை முன்றலில் மரக்கன்றுகளையும் நட்டனர். அத்துடன் களுவாஞ்சிக்குடியிலுள்ள கால்நடை சுகாதார வைத்திய காரியாலயத்துக்கு விஜயம் செய்த குழுவினர் அங்கு பண்ணையாளர்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்ததோடு உரிய தீர்வினைக் காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
0 comments :
Post a Comment