அறுவடை விழாவில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் நசீர்.


ஏ.எல்.எம்.நயீம்

ட்டக்களப்பு மாவட்டத்தின் சோளக அறுவடை விழா அண்மையில் ஏறாவூர் தைக்கா வீதியில் இடம்பெற்றது. இந்த அறுவடை விழாவில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸீர் அஹமத் சோழக அறுவடையை ஆரம்பித்து வைத்தார்.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு மத்திய அமைச்சின் உதவியோடு சோளம் பயிர் செய்வதற்காக மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களம் முலம் 200 ஏக்கர் நிலத்தில் சோளம் பயிர் செய்வதற்காக விதைகள் வழங்கப்பட்டதோடு போதிய ஆலோசனைகளும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம் விவசாயிகள் சோளம் பயிர்ச்செய்கையில் பாரிய வெற்றியை இப்போகத்தில் பெற்றுக் கொண்டனர்.

மேலும் உழுந்து, கௌஃபி, நிலக்கடலை, சின்ன வெங்காயம் பச்சை மிளகு, இதர மரக்கறி வகைகளும் உற்பத்தி செய்வதற்காக சுமார் 750 ஏக்கருக்கு விவசாய திணைக்களத்தினால் வழங்கப்பட்டது.

இந்த சோளக அருவடை விழாவில் அமைச்சரோடு அமைச்சின் செயலாளர் கே.பத்மநாதன், கிழக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் எஸ்.எம்.ஹூசைன், மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பணிப்பாளர் ரா.ஹரிகரன், ஏறாவூர் விவசாய போதனாசிரியர் எம்.ஐ.எம்.ஜமால்தீன்,பண்ணையாளர் முஹமட் ரஸாக் ஆகியோர் உட்பட அமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :