ஓட்டமாவடி சிராஜிய்யா அரபுக்கல்லூரியில் தீ. மாணவர்களின் பொருட்கள் தீக்கிரை.

மட்டக்களப்பு ஓட்டமாவடி முகைதீன் ஜூம்ஆ பள்ளி வாயலுக்கு முன்பாக அமைத்துள்ள சிராஜிய்யா அரபுக்கல்லூரியில் தீ பற்றி கொண்டுள்ளது .இச் சம்பவம் இன்று ( 06.06.2013 ) வியாழக் கிழமை அதிகாலை 4.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை போலீசில் முறைப்பாடு செய்தனை அடுத்து வாழைச்சேனை போலீஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இச் சம்பவத்தின் போது மதரஸா மாணவர்கள் விடுமுறையில் சென்றிருத்தமை குறிப்பிடத்தக்கது. இச் சம்பவத்தில் 1ஆம் மாடியில் அமைத்துள்ள அதிபர் காரியாலய அறை உற்பட மதரஸா மாணவர்களின் படுகைகள் (பெட்) மற்றும் தளபாடங்கள் ,ஆடைகள், அரபு கீதாபுக்கள் மற்றும் புத்தகங்கள் , மின் உபகரணங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவமானது மின் ஒழுக்கின் மூலம் ஏற்பட்டிருக்கலாமா? அல்லது இச் செயலானது யாராலும் திட்டமிடப்பட்டு செய்யப்பட்டிருக்கின்றதா? என்ற அச்ச நிலை மதரஸா நிறுவாகத்தினறுக்கும் பொது மக்களும் தோன்றியுள்ளது. இவ் அரபுக்கல்லுரி 1989 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்திலேயே பிரசித்தி பெற்ற ஒருஅரபு கலாபீடமாகும். என்பது குறிப்பிடத்தக்கது.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :