பெற்றோலிய வளத்துறை பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் கடவுச்சீட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அத்தனகல நீதிமன்ற நீதவான் கவிந்தா நாணயக்காரவின் உத்தரவையடுத்தே அவருடைய கடவுச்சீட்டு இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வீரக்குலத்தில், சிறுவனொருவனை கடத்திய குற்றச்சாட்டில் பிரதியமைச்சர் சரண குணவர்தன உள்ளிட்ட நால்வருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு விசாரணையில் கடந்த விசாரணையின் போது பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் நீதிமன்றுக்கு சமூகமளிக்கவில்லை.
ஜப்பானுக்கு அவசரமாக விஜயம் செய்யவேண்டியிருந்தமையினால் நீதிமன்றுக்கு சமூகமளிக்க முடியாமல் போய்விட்டதாக அவரது சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தின் கவனத்திற்கு இன்று கொண்டுவந்தார்.
கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் வெளிநாட்டுக்கு செல்வதாயின் நீதிமன்றத்திற்கு வந்து கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
நீதவானின் உத்தரவிற்கமைய அவருடைய கடவுச்சீட்டு நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
0 comments :
Post a Comment