போதைப் பொருள் வைத்திருந்து கைது செய்யப்பட்டவர் மாரடைப்பால் மரணம்.

தெமட்டகொட பொலிஸ் நிலையத்தில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சந்தேகநபர் 800 மில்லி கிராம் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டிற்காக தெமட்டகொட பொலிஸாரால் நேற்று (02) இரவு கைது செய்யப்பட்டார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ச
ந்தேகநபருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு தேசிய வைத்தியசாலை பிரேத பரிசோதனை அறிக்கையும் படியும் சந்தேகநபர் மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கிறது.

எனினும் இவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டு பிரசே மக்கள் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :