இரத்தினக்கல் மற்றும் தங்காபரண கொள்ளையில் ஈடுபட்ட ஏழு சந்தேகநபர்கள் பேருவலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதான சந்தேகநபர்கள் வசமிருந்து ஐந்தரை இலட்சம் பெறுமதியான இரத்தினக் கற்கள் ஐந்து, இரண்டு இலட்சம் பெறுமதியான 10 கையடக்கத் தொலைபேசிகள், ரூ.8,65,000 பெறுமதியான தங்காபரணங்கள் மற்றும் பல்வேறு சிம்காடுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
பேருவல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று (19) களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

0 comments :
Post a Comment