பெண் விரிவுரையாளரை தாக்கி காயப்படுத்திய பல்கலைக்கழக மாணவன்.

பெண் விரிவுரையாளரை தாக்கி காயப்படுத்திய நாவல திறந்த பல்கலைக்கழகத்தின் மாணவன் சிவஞானசுந்தரம் சுரேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (19) பிற்பகல் நாவல திறந்த பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் ஒருவர் மாணவனின் தாக்குதலுக்கு உள்ளானதை தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவியது.

கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த பெண் விரிவுரையாளர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நாவல திறந்த பல்கலைக்கழகத்தின் சட்டபீட விரிவுரையாளரே இவ்வாறு பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியரான சிவஞானசுந்தரம் சுரேந்திரன், விரிவுரையாளர் குறிப்பிட்ட தினத்திற்குள் பாடம் தொடர்பான செயற்றிட்டத்தை சமர்ப்பிக்க தவறியுள்ளார்.

இந்நிலையில் பிறிதொரு நாளில் அவரால் வழங்கப்பட்ட செயற்றிட்டத்தை விரிவுரையாளர் ஏற்க மறுத்துள்ளதை தொடர்ந்து அவர்கள் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதன்பின்னதாக சிவஞானசுந்தரம் சுரேந்திரன், விரிவுரையாளரை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விரிவுரையாளரை தாக்கியதன் சுரேந்திரன் பல்கலைக்கழகத்தில் ஒருவகை மருந்தை உட்கொண்ட நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

வைத்தியசாலையில் வைத்து மாணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :