பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் காலமானார்.

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் சென்னையில் இன்று மாரடைப்பால் காலமானார்.

சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது, திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நூறாவது நாள், 24 மணி நேரம், கோபுரங்கள் சாய்வதில்லை, அமைதிப்படை என தமிழில் 50 படங்களை இயக்கியவர் மணிவண்ணன். 400 க்கும் அதிகமான படங்களில் நடித்தும் உள்ளார்.

அண்மையில்தான் மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் நடித்த அமைதிப்படை-2 படம் வெளியாகி இருந்தது.
திமுக தலைவர் கருணாநிதியின் கதை வசனத்தில் பாலைவன ரோஜாக்கள் என்ற படத்தையும் அவர் இயக்கி உள்ளார்.

பிரபல திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவிடம் சேர்ந்து உதவி இயக்குனராக பணிபுரிந்த மணிவண்ணன், பின்னர் தனியாக திரைப்படங்களை இயக்கத் தொடங்கினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :