(எம்.பைஷல் இஸ்மாயில்)
அட்டாளைச்சேனை விளையாட்டுக் கழக சம்மேளனத்தின் சபைக் கூட்டம் சுப்பர் சொனிக் விளையாட்டுக் கழக காரியாலயத்தில் அண்மையில் நடைபெற்றது.
விளையாட்டுக் கழக சம்மேளனத்தின் தலைவர் ஹம்ஸா சனூஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அனைத்து விளையாட்டுக் கழகங்களின் தலைவர்கள், செயலாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இக்கூட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் விளையாட்டுத் துறையை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகள் திட்டமிட்ட ஒழுங்கின் கீழ் செயற்படுத்துவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்தோடு இப்பிரதேசத்தின் கல்வி நிலை, சமூக செயற்பாடு தொடர்பிலும் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் ஆராயப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அண்மையில் நடைபெற்று முடிந்த அட்டாளைச்சேனை பிரதேச செயலக விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்விற்கு சம்மேளனத் தலைவர் அழைக்கப்படாமை கண்டிக்கத்தக்க செயற்பாடாகும் என்று ஹமாஸ் விளையாட்டுக் கழகத்தின் செயலாளர் ஜனூஸ் கொண்டு வந்த கண்டனத் தீர்மானம் அன்று நிறைவேற்றப்பட்டதுடன் அட்டாளைச்சேனை பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஆகியோருக்கெதிராகவே இக்கண்டனத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இக்கூட்டத்தில் சம்மேளனத் தலைவர் ஹம்ஸா சனூஸ் உரையாற்றுகையில், அட்டாளைச்சேனை பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் பக்கச்சார்பாக செயல்படுகின்றார். ஒவ்வொரு கழகத்தையும் ஒவ்வொரு விதமாக பார்க்கின்றார். இதற்கு உதாரணம் ஹிரோ விளையாட்டுக் கழகம் சகல போட்டிகளிலும் இருந்து புறந்தள்ளப்பட்டது.
விளையாட்டு உத்தியோகத்தரின் செயல்பாடு இவ்வாறுதான் தொடர்ந்தால் அட்டாளைச்சேனையின் விளையாட்டுத் துறை முற்றாக அழிந்து விடும். விளையாட்டு உத்தியோகத்தரை மாற்றாத வரைக்கும் இப்பிரதேச விளையாட்டுத் துறையை உயர்த்துவது மிகக் கஸ்டமான விடயமாகும். தன்னை விட்டால் எவரும் இல்லை என்கின்ற இறுமாப்போடு விளையாட்டு உத்தியோகத்தர் நடந்து கொள்கின்றார்.

எனவும் விளையாட்டுக் கழகங்கள் கலந்து கொள்கின்ற கூட்டங்களில் தூசன வார்த்தைகளை பிரயோகிக்கின்றார். என்றும் இதை எவ்வாறு பார்த்துக் கொண்டிருப்பது. நமது பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதால் பல தடவைகள் அவரோடு ஒத்துப்போக முயற்சித்தாலும் அவர் எம்மை புறக்கணிப்பதிலேயே உள்ளார். இதற்கு மேல் ஒத்துழைப்பு என்ற சொல்லுக்கு வரமுடியாது.
அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதான அபிவிருத்தி தொடர்பாக விளையாட்டு உத்தியோகத்தர் அண்மையில் ஒரு கூட்டத்தினை கூட்டியிருந்தார். இது பிழையான செயற்பாடாகும். விளையாட்டு மைதானம் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கீழ் உள்ளது. பிரதேச சபையின் தவிசாளர் தான் கூட்டத்தினை கூட்ட வேண்டும். அதைவிடுத்து விளையாட்டு உத்தியோகத்தர் கூட்டத்தினை கூட்டி விளையாட்டுக் கழகங்களை அசிங்கப்படுத்தியுள்ளார். என்ற விடயம் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக உள்ளன.
அட்டாளைச்சேனை விளையாட்டுக் கழக சம்மேளனம் கடந்த வருடம் நடைபெற்ற கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டிக்காக இலட்சக் கணக்கான ரூபாய்களை செலவழித்து இப்பிரதேசத்தின் கௌரவத்தை பாதுகாத்தது நாம் அறிந்த விடயமாகும். அந்த நிகழ்விலும் சம்மேளனத் தலைவரும் சம்மேளன உறுப்பினர்களும் புறக்கணிக்கப்பட்டனர். என்ன செய்வது நமது மண்ணின் மரியாதைக்காக பொறுத்துக் கொண்டோம். இனியும் பொறுக்க முடியாது.
அட்டாளைச்சேனையில் அனைத்துக் கழகங்களும் நமது சம்மேளனத்தில் இணைந்திருப்பதால் நாம் எடுக்கின்ற முடிவுகள் காத்திரமானவையாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன். அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானம் இந்தப்பிரதேசத்தில் உள்ள சகல விளையாட்டு வீரர்களுக்கும் உரித்தானதாகும். அதில் குறிப்பிட்ட வீரர்கள் பயிற்சி பெறுகின்ற இடமாக நீங்கள் கருத வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கின்றேன். என தலைவர் ஹம்ஸா சனூஸ் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மௌண்டன் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஐ.எல்.பஜிறுதின், பைனா வி.கழகத் தலைவர் எ.எல்.மக்கீன், ஹமாஸ் வி.கழகத் தலைவர் எம்.எஸ்.எம்.ஜகுபர், சுப்பர் சொனிக் வி.கழகத் தலைவர் அன்வர் நௌசாத், லக்கி வி.கழகத் தலைவர் எஸ்.எம்.அறூஸ் உட்பட பலரும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர்.

0 comments :
Post a Comment