கிழக்குமாகாண அமைச்சின் நடமாடும் சேவையில் நெசவு கைத்தறி பார்வையிடும் நிகழ்வு.

ஏ.எல்.எம்.நயீம்
கிழக்கு மாகாண கிழக்கு மாகாண, விவசாய, கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, கிராமியக் கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி, மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சின் நடமாடும் சேவையும் அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்களுக்கு அமைச்சு அதிகாரிகளுடன் விஜயம் செய்து குறைகளை நிவர்த்தி செய்யும் நடவடிக்கைகளும் இன்று வியாழக்கிழமை 1முதல் சனிக்கிழமை வரை திருகோணமலை மாவட்டத்தில் நடைபெற்றுவருகிறது.

முதல் நாள் நிகழ்வு இடம்பெற்றபோது இந்த நடமாடும் சேவையில் அடம்போடை சிறு முயற்சியாளர் நிலையத்தில் அமைந்துள்ள கைத்தொழில் திணைக்களத்தின் விற்பனை நிலையத்தை திறந்து வைப்பதற்காக வருகை தந்த அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், கிழக்கு மாகாண அமைச்சின் தவிசாளர் ஆரியவதி கலப்பதி, அமைச்சின் செயலாளர் Nகு.பத்மநாதன் ஆகியோர் அழைத்து வரப்படுவதையும் அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் விற்பனை நிலையத்தை திறந்து வைப்பதையும் உற்பத்திப் பொருளொன்றை கொள்வனவு செய்வதையும் அடம்போடையில் அமைந்துள்ள நெசவு கைத்தறி ஆலையை பார்வையிடுவதையும் நிலாவெளியில் அமைந்துள்ள கைத்தறி பார்வையிடுவதையும் விவசாயிகளின் குறைகளை கேட்டறிவதையும் , குச்சவெளி, புல்மோட்டை கமநல சேவை நிலையங்களில் விவசாயிகளின் குறைகளை கேட்டறிவதையும் படங்களில் காண்க.

படத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், மாகாண சபை உறுப்பினர்களான ரம்ழான் அன்வர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் ஏ.தண்டாயதபாணி, ரம்ழான் அன்வர் உட்பட திணைக்களப் பணிப்பாளர்களும் அமைச்சின் அதிகாரிகளும் படத்தில் காணப்படுகின்றனர்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :