
( கல்முனை நிருபர் )
கல்முனை மேயர் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற எமது ஊடக அறிக்கைக்கு மேயரின் பதில் அறிக்கை அவலை நினைத்துக்கொண்டு உரலை இடித்தது போல் உள்ளது.
என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீட் தெரிவித்தார்.
இது விடயமாக அவர் மேலும்; தெரிவித்தாவது,இந்த அறிக்கை மேயர் சொல்வது போன்று இருந்தாலும் கடைசியில் ஒப்பமிடும்இடத்தில் மேயரின் ஊடக இணைப்பாளரின் பெயரே குறிப்படப்பட்டிருப்பதன் மூலம் ஓர்அறிக்கை கூட சுயமாக எழுதத்தெரியாத ஒருவராககல்முனைமேயர்இருப்பதுகவலைக்குரியதாகும்.
ஆனாலும் நாம் அதற்கு பதில் சொல்ல வேண்டியது எமது கடமை.
மேயர் எழுதுவதாக வந்த அறிக்கையில் வியாபாரத்தின் பெயரை மாற்றி மக்களைஏமாற்றுவது போல் நாம் கட்சியின் பெயரை மாற்றிக்கொண்டிருப்பதாக கூறியதன் மூலம்எம்மை அவமானப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு இவருக்கு வாழ்வளித்த ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பெருந்தலைவர் அஷ்ரபை அவமானப்படுத்தியுள்ளார்.
தலைவர் அஷ்ரப் தனது அரசியலை முஸ்லிம் ஐக்கிய முன்னணி எனும் கட்சியை 1977களில்ஆரம்பித்தே முன்னெடுத்தார். பின்னர் 81ல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசைஆரம்பித்தார்.
ஆதன் பின் 99களில் தேசிய ஐக்கிய முன்னணியை ஆரம்பித்து இனி
முஸ்லிம் காங்கிரஸ் தேசிய ஐக்கிய முன்னணியாக இயங்கும் என அறிவித்தார்.
இவ்வாறு பல பெயர்களை உருவாக்கியதன் மூலம் தலைவர் அஷ்ரப் ஏமாற்று அரசியல்வாதிஎன தனது கட்சியின் வரலாறு கூட தெரியாதவராக மேயர் உளறியுள்ளார்.
நாம் எமது கட்சியின் பெயரை நாமாக மாற்றவில்லை, தேர்தல் ஆணையாளரின்ஆலோசனைக்கிணங்கவே மாற்றினோம் என்பது உலகறிந்த விடயம். அவ்வாறு மாற்றியதன் மூலம் எதிர் காலத்தில் பிக்குகளின் பெயரால் யாரும் கட்சி பதிய முடியாது என்ற வரலாற்று திருப்பத்த ஏற்படுத்தியுள்ளோம்.
ஓர் அரசியல் கட்சியான எம்மை அறிக்கை விட வேண்டாம் என சொல்வதற்கு மேயருக்கு உரிமையில்லை. அரசியல் கட்சியின் பணியே அறிக்கை விடுவதுதான். தின
பத்திரிகைகளின் முன் பக்க செய்தியை படித்தால் ஒவ்வொரு நாளும் அரசியல்
கட்சிகள் எத்தனை அறிக்ககைளை விடுகின்றன எ;பது தெரியும். இதனை நாம் தொழிலாக
செய்யவில்லை, சமூகப்பணியாக செய்து வருகிறோம். அறிக்கைள் சோறு தராது மாறாக
பொலிஸ் விசாரணைகளையே தரும் என்பது அரசியலில் குழந்தையான மேயருக்கு தெரியாது.
உண்மையில் இவர் பல்கலைக்கழக்த்தில் கற்று பட்டதாரியாகி பின்னர் பீ எச் டி முடித்து கலாநிதியாகியிருந்தால் இதுவெல்லாம் தெரிந்திருக்கும் தனது பெயரின் முன்னால் கலாநிதி என போடும் இவர் எந்த பல்கலைக்கிகத்தில் பீ எச் டி முடித்தார் என பகிரங்கமாக ஊடகங்களில் காட்ட முடியுமா? பணமிருந்தால் கலாநிதி பட்டம் கூட வாங்கப்படும் கேவலமான உலகில் நாம் வாழ்கிறோம்.
கல்முனை பணியாளர்கள் 8ம் தரப்படி சட்டப்படி வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தால் க.பொத. சித்தியடைந்திருக்க வேண்டும் என்ற புதிய சுற்று நிருபத்திற்கிணங்க ஏன் பத்து வருடங்களுக்கு மேலாக பணிபுரிவோரை நீக்க வேண்டும்.?
முன்னர் ஆசியரியராக நியமிக்கப்பட்டவர்கள் 8ம்வகுப்பு வரையான எஸ் எஸ் எல்சி தான். பின்னர் க..பொ. த சட்டம் வந்த போது பழையவர்கள் நீக்கப்பட்டார்களா?
ஆக பணியாளர்களை நீக்கியமை சட்டம் பற்றிய மேயரின் அறியாமை என்பதும் பின்னர் பணியாளர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாகவும் எமது கட்சியின் கண்டனம் காரணமாகவும் மீண்டும் அவர்கள் பணிக்கு சேர்க்கப்பட்டதன் மூலம் தெரிகிறது.
இதனை கண்டித்த ஒரேயொரு முஸ்லிம் கட்சி நாமே.
வெற்றி பெறச்செய்து மேயராக்கியுள்ளமை கல்முனை மக்களின் தலை எழுத்து என்பதை தவிர வேறு வார்த்தை இல்லை.
இவ்வாறு சுற்றறிக்கையில் என்ன உள்ளது என்பதைக்கூட வாசித்தறிய முடியாத ஒருவரை முஸ்லிம் காங்கிரஸ் பெயரால் மக்கள்
வெற்றி பெறச்செய்து மேயராக்கியுள்ளமை கல்முனை மக்களின் தலை எழுத்து என்பதை தவிர வேறு வார்த்தை இல்லை.
0 comments :
Post a Comment