சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் இன்னும் பகிர்ந்தளிக்கப்படவில்லை-மக்கள் கவலை

(எம்.பைஷல் இஸ்மாயில்)
சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் முழுமையாக தமக்குப் பகிர்ந்தளிக்கப்படவில்லை என மருதமுனை மேற்கு வட்டைப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

சுனாமியின் கோரப்பிடிக்குள் சிக்குண்டு உறவுகளையும் உடைமைகளையும் இழந்து நிற்கும் தங்களின் வாழ்வு இன்னும் பழைய நிலைக்குத் திரும்பவில்லை என இவர்கள் அங்கலாய்க்கின்றனர்.

மருதமுனை மேற்கு, வட்டைப்பகுதியிலுள்ள 65 மீற்றர் வீட்டுத்திட்டம் தேச நிர்மாண மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் நிதியுதவியின் கீழ் கடந்த 2007 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2009 பூர்த்தியானது. ஆயினும் இதுவரை தமக்கான வீடுகள் ஏன் பகிர்ந்தளிக்கப்படவில்லை என பிரதேச மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இவ்வாறு நிர்மாணிக்கப்பட்ட வீடுகளில் சமூகச் சீர்கேடுகள் இடம்பெறுவதாகவும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த வீட்டுத் திட்டத்தின் கீழ் 186 வீடுகளில் 94 வீடுகள் மாத்திரமே தமக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். 

தமக்கான இந்த வீடுகளைப் பகிர்ந்தளித்து தமது எதிர்கால வாழ்க்கையினை மேம்படுத்த உதவுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மருதமுனை மேற்கு பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :