பாலியல் தொழிலில் மாத்தளையிலுள்ள பிரபல மகளிர் கல்லூரியொன்றின் மாணவிகள்.

மாத்தளையிலுள்ள பிரபல மகளிர் கல்லூரியொன்றின் மாணவிகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் உடனடி விசாரணைகளை நடத்துவதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தீர்மானித்துள்ளது.

மாத்தளை மாவட்டத்திலுள்ளள சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள் இந்த விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி அனோமாத திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மாத்தளையிலுள்ள பாடசாலை மாணவிகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதாக வெளியான தகவல் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கவலை வெளியிட்டுள்ளது.

ஆசிரியர்கள் மாணவர்களை தவறான முறையில் வழிநடத்தினால் அதற்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அதிகார சபை வலியுறுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கான பாதுகாப்பை பெற்றுக்கொடுப்பதற்கும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு எதிராக கல்வி அமைச்சுடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் தீர்மானித்துள்ளதாக சபை குறிப்பிட்டுள்ளது.

மாத்தளையிலுள்ள பிரபல மகளிர் கல்லூரி ஒன்றின் மாணவிகளை ஆசிரியைகள் சிலர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தின்போது நேற்று சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.N1st
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :