(எம்.பைஷல் இஸ்மாயில்)
உலக சுற்றாடல் தினத்தையொட்டி அட்டாளைச்சேனை அல் ஜெஸீறா வித்தியாலய அதிபர் எம்.ஐ.எம்.றியாஸ் ஒழுங்கு செய்திருந்த மரம்நடும் நிகழ்வு பாடசாலையின் வளாகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு மரம்நடும் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர் எம்.சித்திக், பாடசாலையின் அதிபர் மற்றும் அட்டாளைச்சேனை பொதுநூலகர் எம்.ஏ.சீ.அன்வர் சதாத் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
அட்டாளைச்சேனை முல்லைத்தீவு என்ற இந்த கிராமத்தைப் பற்றியும் இங்குள்ள ஏளைக் குடும்பங்களைப் பற்றியும் இந்த இடத்தில் சற்று கூறியே ஆகவேண்டும். என்ற காரணத்தினால் இக்கராமத்தைப்பற்றி சற்று பின்நோக்கிச் செல்வோமையானால்,
இக்கிராமத்தை ஒரு பசுமையாக மாற்றும் நோக்கில் ஸ்ரீலாங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும் துறைமுக அபிவிருத்தி புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சராக இருந்த அமைச்சர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப்பினால் இக்கிராமத்தின் பெயர் முல்லைத்தீவு என்றிருந்த பெயரை மீலாத் நகர் என பெயர் சூட்டி கடந்த காலங்களில் பல அபிவிருத்திகளை மேற்கொண்டு வந்தார்.
அந்த அபிவிருத்திகளில் 1997 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் திகதி அல் ஜெஸீறா பாடசாலையின் அதிபர் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து கற்பித்துக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கென்று தங்குமிட விடுதிகள் என்றும் இங்குள்ளவர்களின் பிள்ளைகளுக்கு சிறுவர் பூங்கா, சனசமூக நிலையம், பள்ளிவாசல் மற்றும் இக்கிராம மக்களுக்கென பல வீடுகளையும் கட்டிக்கொடுத்து இக்கிராம மக்கள் மிக பசுமாமையாக வாழ வைக்கவேண்டும் என்ற தூய நோக்கிலேயே மறைந்த தலைவர் அஷ்ரப் இதனை செய்தார்.
இந்நிலைமை காலப்போக்கில் ஒரு மந்த நிலைமைக்கு பொதுமக்களால் புரம் தள்ளப்பட்டன. ஏனெனில் முல்லைத்தீவு கிராமமக்களுக்கு ஒரு பாரிய அபிவிருத்தி திட்டத்தை மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் மேற்கொள்ளும் திட்டத்தைப்பற்றி அன்று வசதி படைத்தவர்கள் அறிந்திருந்ததினால் இரவோடு இரவாக அங்குள்ள ஏழை எளிய மக்களை ஏமாற்றி மிக குறைந்த விலையை கொடுத்து காணிகளை வாங்கி தங்களின் மூத்த பரம்பரையின் பெயரில் பதிகளை மேற்கொண்டே இவ்வாறு இவ்வீட்டுத்திட்டத்தை அவதரித்துக் கொண்டனர்.
மீலாத் நகரில் அமையப்பெற்ற அனைத்து வீடுகளும் வசதி படைத்தவர்களுக்கு கட்டி கொடுக்கப்பட்டுள்ள விடயத்தினை மறைந்த மாபெரும் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அன்று அறிந்திருக்கவில்லை. இதற்கு அன்றிருந்த அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரும் இச்செயலுக்கு துணை போனார். காரணம் அவரும் இவ்வாரே செய்திருந்ததன் காரணத்தினாலேயே ஆகும்.
இவ்வாறு வசதி படைத்தவர்கள் பெற்றுக்கொண்ட வீடுகளை விடுமுறை தினங்களில் நேரகாலத்தை கழிப்பதற்காக பிரயோகித்து வந்தனர். இந்நிலைமை காலப்போக்கில் இல்லாலேயே போய்விட்டது. இதனால் இக்கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள பள்ளிவாசல், சனசமூக நிலையம், பாடசாலை விடுதிகள், சிறுவர் பூங்கா மற்றும் வீடுகள் யாவும் கட்டாக்காலி தங்கும் இடமாகவும், இன்றைய இளைஞர்கள் மதுபான வகைகளை அருந்தும் இடமாகவும் பல வருடங்களாக காணப்பட்டு வந்தது.
இந்நிலைமையில் மீலாத் நகர் அல் ஜெஸீறா வித்தியாலயத்துக்கு அதிபராக கடமைபெறுப்பை ஏற்ற அதிபர் எம்.ஐ.எம்.றியாஸ் இக்கிராமத்தையும், இங்குள்ள சில குடும்பங்களின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளையும், அப்பிள்ளைகள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலைமையை அவதானித்த அதிபர் றியாஸ் இப்பிள்ளைகளை எப்படியோ ஒரு முன்னெற்றப் பாதையைக்கு இட்டுச்சென்று எமது நாட்டில் ஒரு சிறந்த பிள்ளைகளாக மாற்றியமைக்க வேண்டும் என்ற ஒரு தூய நற்சிந்தனை கொண்டராக இயங்கத்தொடங்கினார்.
மேலும் இக்கிராமத்தில் கல்வியை கற்கவரும் பிள்ளைகளின் கல்வி விடயத்தில் மிக அதிக அக்கரை கொண்டவராகவும் அப்பிள்ளைகளின் கல்வி மற்றும் விளையாட்டு என பல விடயங்களில் அதிக ஆர்வமிக்கவராகவும் மாற்றியமைத்து செயற்பட்டு வருகின்றமையும் இங்கு கட்டாயம் குறிப்பிட்டுக் காட்டியே ஆகவேண்டும்.
இதன் ஒரு அங்கமாவே கடந்த வாரம் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸிடம் குறிப்பிட்ட மாணவர்களின் விடயம் தொடர்பிலும் பாடசாலைக்கு முன்பாக அமைந்துள்ள சனசமூக நிலையம் மற்றும் சிறுவர் பூங்காவை மறுசீரமைத்துத் தரவேண்டும்.
எனவும் இதனை மறுசீரமைத்து தருவதன் மூலம் மீலாத் கிராமத்தில் வசிக்கும் குடும்பங்களும், மாணவர்களும் அறிவு ரீதியாகவும் மன உலைச்சலில் இருந்தும் விடுபட்டு ஒரு முன்னெற்றப் பாதையை அடைவார்கள் அதற்கான உதவிகளையும் செய்து தருமாறும் என்ற கோரிக்கையை முன்வைத்ததினால் தவிசாளர் அன்ஸிலும் அதற்காக உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.
மர்ஹூம் அஷ்ரப் முன்னெடுத்த திட்டத்தில் வசதிபடைத்தவர்களின் தீய செயலினால் மீலாத் நகர் கிராமத்திலுள்ள சில குடும்பங்களின் பிள்ளைகள் எல்லா விடயங்களிலும் பாதிக்கப்பட்டு வந்தவை தற்போது அல் ஜெஸீறா வித்தியாலய அதிபர் எம்.ஐ.எம்.றியாஸின் முழு முயற்சியிக்கு அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸிலும் துணை போவதனால் இக்கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு மீண்டும் ஒரு புத்துனர்ச்சி கிடைக்கப்பெற்று ஒரு முன்னெற்றப் பாதையை முன்னொக்கிச் செல்வதையும் காணக்கூடியாக உள்ளது.
எனவே இக்கிராம மக்களின் பிள்ளைகள் எதிர்காலத்தில் நாட்டின் ஒரு சிறந்த நற்பிரஜையாகவும் கல்விமான்களாகவும் சிறந்து விளங்குவார்கள் என்று நம்பிக்கை தற்போது தங்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் இதற்காக முன்னின்று உழைத்த அதிபர் றியாஸ் மற்றும் தவிசாளர் அன்ஸில் ஆகியோரை பாராட்டியும் நன்றியுள்ளம் கொண்டவர்களாகவும் இக்கிராம மக்கள் கூறுகின்றனர்.

0 comments :
Post a Comment