மாத்தளையில் மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடுகளின் எச்சங்கள் குறித்த வழக்கு .

மாத்தளையில் மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடுகளின் எச்சங்கள் குறித்த வழக்கு விசாரணைகளை நடத்தி வந்த மாத்தளை நீதவான் சத்துரிகா டி சில்வா, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் JVP மற்றும் The Bar Association of Sri Lanka (BASL) ஆகியன எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

 இந்த உடனடி இடமாற்றம் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று JVP தெரிவித்துள்ளது. அதேவேளை எதிர்வரும் 29 ஆம் திகதி நிர்வாக கூட்டத்தில் இந்த விவகாரம் ஆராயப்படவுள்ளது என்று The Bar Association of Sri Lanka (BASL) தெரிவித்துள்ளது.

கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தின் மேலதிக நீதவானாக மாத்தளை நீதவான் சத்துரிகா நியமிக்கப்பட்டுள்ளதுடன், அவர் இன்று பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு முதல் சத்துரிகா மாத்தளை நீதவானாக சேவையாற்றி வருகின்றார்.

அதேவேளை மாத்தளை மனித புதைக்குழி குறித்து விசாரணை நடத்துவதற்காக கடந்த 20 ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றையும் நியமித்தார். இந்த நிலையிலேயே மாத்தளை நீதவான் கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ்.ஐ.இமாமின் தலைமையிலான மூன்று பேர் அடங்கிய அந்த விசாரணைக் குழுவில் பாராளுமன்றத்தின் முன்னாள் செயலாளர் நாயகம் தம்மிக்க கித்துலேகொட மற்றும் ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி பந்துல அத்தநாயக்க ஆகியோரும் அங்கம் வகிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :