பேரினவாத அமைப்பான பொது பல சேனா அமைப்பின் நோக்கம்தான் என்ன.


முஹம்மது நியாஸ்: 
லங்கை நாட்டில் முஸ்லிம்களுக்கெதிரான பயங்கரவாத செயற்பாடுகளை கட்டவிழ்த்துவிடுகின்ற பிரபல பேரினவாத அமைப்பான பொது பல சேனா அமைப்பின் பொதுக்கூட்டமொன்று கடந்த ஒன்பதாம் திகதி அம்பாறை நகரில் இடம்பெற்றது அக்கூட்டத்தில் குறித்த பயங்கரவாத அமைப்பின் பொதுச்செயலாளர் கலகோட அத்தே ஞானசார தேரர் ஆற்றிய உரையில் குறிப்பிட்ட ஒரு விடயம் காய்ந்த மாடு கம்பில் விழுந்த கதையாகவே நோக்கப்படுகிறது.

அதாவது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பூரண ஆதரவுடன் மலிக் அப்துல்லாஹ் பல்கலைக்கழகம் கிழக்கு மாகாணத்தில் காத்தான்குடி நகரில் அமையப் பெறுவதற்கான சகல ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ள இவ்வேளையில் கடந்த ஒன்பதாம் திகதியன்று கலகொட அத்தே ஞானசார தேரர் அவர்கள் அப் பல்கலைக்கழகத்தை மூடவேண்டுமென்றும் அவ்வாறு மூடப்படாவிட்டால் அதற்கெதிராக தமது அமைப்பின் சார்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்யப்போவதாகவும் தெரிவித்தார்.

கலகொட அத்தே ஞானசார தேரர் அவர்களே!

பல தசாப்த காலமாக பயங்கரவாத படுகுழிக்குள் தள்ளப்பட்டிருந்த நமது இலங்கைத் திருநாடு சுமார் மூன்று ஆண்டுகளாகவே ஒரு நிம்மதியான சூழலில் காணப்படுகின்றது.இவ்வேளையில் பௌத்த மதத்தை காப்பாற்றப் போகிறோம் என்று புறப்பட்ட நீங்கள் பௌத்தமதம் அழிந்து கொண்டிருக்கும் எந்தவொரு வாசல்களையும் மூடுவதற்கு முயற்சிக்காமல் வெறுமனே முஸ்லிம்களின் அடிச்சுவடுகளை மாத்திரம் அளிக்க எத்தனிப்பத்தேன்?

உண்மையில் இந்நாட்டில் நீங்கள் கூறுவது போன்று பௌத்தர்களுக்கு மதரீதியான சிக்கல்கள் இருக்குமானால் அதனை ஜனநாயக ரீதியான முறையில் தீர்த்துகொள்வதை புறக்கணித்து பயங்கரவாத செயல்பாடுகள் மூலம் தீர்க்க முற்பட்டு பாமர மக்களை படுகுழியில் தள்ளுவதில் உங்களுக்கு கிடைக்கும் இலாபம்தான் என்ன?

அன்று விடுதலைப்புலிகள் தங்களின் அற்ப சொற்ப இலாபங்களுக்காக தமிழர்களுக்குப் பிரச்சினை என்னும் போர்வையை போர்த்திக்கொண்டேதான் அப்பாவித்தமிழ் மக்களையும் சீரழித்து இந்நாட்டின் எதிர்காலத்தையும் பல தசாப்தங்களுக்கு பின் தள்ளிவிட்டுச் சென்றார்கள்.

இன்று நீங்களும் பௌத்தர்களுக்குப் பிரச்சினை என்று கோஷமிட்டுக்கொண்டு பிரச்சினைக்குரிய வாயிலை விட்டு விட்டு வெறுமனே முஸ்லிம்களின் மதம் சார்ந்த உரிமைகளை நசுக்க முற்பட்டால் உங்களுக்கும் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் உள்ள வித்தியாசம்தான் என்ன?

இலங்கை நாட்டிற்கு மிகவும் விசுவாசம் மிக்க குடிமக்கள் தாங்கள்தான் என்றும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை நாட்டில் தீவிரவாதத்தை வளர்க்கிறது என்றும் ஒப்பாரி வைக்கின்ற நீங்கள் இந்நாட்டின் தலைவர்கள் சர்வதேச விசாரணை மன்றங்களில் குற்றவாளிகளாக கூண்டிலேற்றப்பட்டு நின்றபோது உங்களின் நாட்டின் மீதுள்ள விசுவாசமும் அக்கறையும் எங்கே சென்று ஒழிந்தது?

ஒரு ஜனநாயக நாட்டில் பல்வேறுபட்ட மதங்களும் பலதரப்பட்ட கலாச்சாரங்களும் இருப்பது ஒரு சாதாரண விடயம்.அந்த வகையில் இலங்கை நாடும் அதற்கு விதிவிலக்கல்ல.அடுத்தவர்களின் உரிமைகள் உணர்வுகளை மதித்து நடப்பதே மனித இயல்பின் அடையாளம்.ஆனால் ஒரு பெரும்பான்மை சமூகத்திற்கே வழிகாட்ட வேண்டிய பொறுப்பிலுள்ள மதப்போதகர்களாகிய நீங்கள் இனவாதம், பிரதேசவாதம் பேசி அப்பாவி மக்களை தவறானமுறையில் வழிநடாத்துவது தாங்கள் சார்ந்த மதத்திற்கு உகந்த ஒரு விடயமா? உண்மையில் கௌதம் புத்தர் பெருமான் இதைத்தான் போதித்துவிட்டுச் சென்றாரா?

முஸ்லிம்கள் தங்களின் மதக்கிரியைகளுக்காக தாங்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேசங்களிலேயே அதற்கான வழிவகைகளை மேற்கொள்கின்றனர்.முஸ்லிம்களின் எந்தவொரு வணக்க முறைகளும் யாதொரு சமூகத்திற்கோ தனிமதர்களுக்கோ எந்தவொரு வகையிலும் இடையூறு விளவிக்காதவையாகும்.இஸ்லாமிய வணக்கமுறைகளில் இசை கிடையாது, கூத்து கும்மாளங்கள் கிடையாது, ஊர்வலங்கள் கிடையாது இதய நோயாளர்களுக்கும் படிக்கின்ற மாணவர்களுக்கும் இடையூறு ஏற்படுத்துகின்ற பட்டாசு, வாண வேடிக்கைகளை காணமுடியாது.இன்னும் சொல்லப்போனால் பெருநாள் தினங்களில் கூட அந்நிய மதத்தினரோடு அழகான முறையில் உறவாடுகின்ற உன்னத சமூகமே முஸ்லிம் சமூகம்.

அவ்வாறிருக்க இந்நாட்டில் இளைஞர்களை வழி கெடுக்கின்ற எத்தனையோ இடங்கள் இருக்கின்றன.அதுவும் நீங்கள் எதனை புனித பூமி என்றும் புனித பிரதேசம் என்றும் அடையாள படுத்துகிறீர்களோ அப்பிரதேசங்களிலேயே சாராய விற்பனை நிலையங்கள்,நட்சத்திர ஹோட்டல்கள் என்னும் பெயர்களில் இயங்குகின்ற உல்லாச விபச்சார விடுதிகள், பலசூதாட்ட, களியாட்ட விடுதிகள் இன்னும் இது போன்ற சமூகங்களை, குடும்பங்களை குட்டிச்சுவராக்குகின்ற எத்தனையோ விடயங்கள் அரங்கேறுகின்றன.

இப்போது கூட சுமார் முப்பத்தியைந்து கோடி ரூபா செலவில் கொழும்பு சம்போடி விகாரைக்கு அருகில் மிகவும் நவீன முறையிலான சூதாட்ட விடுதியொன்று அமையப்பெறவுள்ளது.இக் கசினோ விடுதியினால் விகிதாசார அடிப்படையில் அதிகளவில் சூறையாடப்படுவது சிங்கள மக்களின் வாழ்வாதாரமும் கலாச்சாரமுமே. சிங்கள மக்களை பாதுகாப்போம் என்றும் பௌத்த மதத்தைப் பாதுகாப்போம் என்றும் சந்து பொந்துகளிலெல்லாம் கொக்கரித்துத் திரிகின்ற நீங்கள் இக் கசினோ விடுதி விடயத்தில் ஆப்பிளுத்த குரங்குகள் போல் அமைதியாக இருப்பதன் அர்த்தம் என்ன?

பௌத்தத்தின் புனித பூமியான இலங்கை நாட்டில் மாடுகள் அறுப்பதற்கு எதிராக தீக்குளிப்புவரை சென்ற நீங்கள் (அது ஒரு நாடகம் என்பது வேறு விடயம்) கசினோ என்னும் பெயரில் இப்புனித பூமியில் நாளை நடக்கவிருக்கும் சூதாட்டத்திற்கு எதிராகவும் காம களியாட்டத்திற்கு எதிராகவும் எடுக்கவிருக்கும் எதிர்ப்பு நடவடிக்கைதான் என்ன?
அன்பின் இலங்கைவாழ் பௌத்த சிங்கள சகோதரர்களே!

நாம் வாழ்கின்ற இத்திருநாட்டில் சுமார் முப்பது வருட காலம் வேரோடிப்போயிருந்த புலிப்பயங்கரவாதம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.இருந்த போதிலும் புலிப்பயங்கரவாதிகள் தங்களை ஒரு பயங்கரவாத இயக்கமாக அடையாளப்படுத்திக் கொண்டேதான் செயற்பட்டார்கள்.அதனால் அவர்கள் விடயத்தில் நாம் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டோம்.ஆயினும் ஈடுசெய்ய முடியாத இழப்புக்கள் பலவற்றை சந்தித்தோம்.

ஆனால் தற்போது இந்நாட்டில் ஜாதிக ஹெல உறுமய,பொதுபல சேனா,ராவண பலய போன்ற நவீன பயங்கரவாத அமைப்புக்கள் பல வெளிக்கிளம்பியுள்ளன. அவை அன்று புலிப்பயங்கரவாதிகள் தங்களின் மேலைத்தேய எஜமானர்களின் விசுவாசத்திற்காகப் பிரயோகித்த ஒரு கோஷம்தான் தமிழர்களுக்குப் பிரச்சினை என்பது.

உண்மையில் இந்நாட்டில் தமிழர்களுக்கு இருந்த இருக்கின்ற பிரச்சினைகள் வேறு,விடுதலைப்புலிகளுக்கு இருந்த பிரச்சினைகள் வேறு.ஆயினும் தங்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக தமிழர்களின் பிரச்சினைகளை பகடைக்காயாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.ஆனால் உண்மை என்னவென்றால் இந்நாட்டிலுள்ள ஒவ்வொரு சாதாரண தமிழ் குடிமகனும் தனது நெஞ்சில் கைவைத்துக் கூறக்கூடிய அளவிற்கு தமிழர்கள் விடுதலைப் புலிகளினாலேயே அதிகளவில் துன்பங்களை அனுபவித்தனர்.

இதே நிலைமைதான் இன்று சிங்கள மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது.இலங்கைத் திரு நாட்டை இனரீதியாக சூறையாடுவதில் விடுதலைப்புலிகளுக்கு உதவிக்கரம் நீட்டிய மேற்கத்தேயவதிகளை கைகளை இலங்கை இராணுவம் ஓட்ட நறுக்கியது.

அதில் தோல்விகண்ட அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மன், நோர்வே போன்ற நாசகார சக்திகள் தற்போது பௌத்த பேரினவாதிகளை தம்வசப்படுத்திக் கொண்டு அவர்களை பயன்படுத்தி இந்நாட்டை சூறையாட முயற்சிக்கின்றனர்.

இவ்விடயத்தில் சாதாரண பொது மக்கள் மிகவும் நிதானத்துடன் இருக்க வேண்டும்.கடந்த தசாப்தங்களில் போராளிகள் என்ற போர்வையில் அப்பாவி இளைஞர்களை பலி கடாக்களாக்கிய விடுதலைப்புலிகளின் வழியில் நின்று இன்று பொது பல சேனா,ஹெல உறுமய போன்ற பயங்கரவாத அமைப்புக்கள் செயற்படுகின்றன.ஏற்கனவே போர் என்னும் படுகுழியில் விழுந்து எழுந்து நிற்க முயல்கின்ற இந்நாட்டை மீண்டும் அதள பாதாளத்தை நோக்கித் தள்ளுகின்ற முயற்சியில் இவ்வமைப்புக்கள் கங்கணம் கட்டியுள்ளன.

இவ் இலங்கைத் திருநாட்டில் பல பாரம்பரியமிக்க பௌத்த சங்கங்கள் இருக்கின்றன.பல பிரிவெனாக்கள் உள்ளன.புகழ் மிக்க பல பீடாதிபதிகள் வாழ்கின்றனர்,வாழ்ந்து மறைந்தும் உள்ளனர்.இதுகால வரைக்கும் அவர்கள் யாரும் முஸ்லிம்களின் மதரீதியான செயற்பாடுகளுக்கோ கலச்சாரங்களுக்கோ முட்டுக்கட்டைகளாக இருந்த வரலாறுகள் கிடையாது.

மாறாக முஸ்லிம் மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்த தலைவர்களே இந்நாட்டில் அதிகம் உள்ளனர்.இன்றும் கூட பல அரசியல் தலைவர்கள் பௌத்த பீடாதிபதிகள் சகல இன மக்களும் மத ரீதியாக மொழி ரீதியாக ஒற்றுமையுடன் வாழவேண்டுமென்று மிகவும் பிரயத்தனத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் மிகக்குறுகிய காலத்திற்குள் தோற்றம் பெற்று பௌத்த தர்மங்களை உடைத்தெறிந்து முழு இலங்கைவாழ் பௌத்த மக்களுக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் விதமாக இக்கடும்போக்குவாத அமைப்புக்கள் செயற்பட்டு வருகின்றன.

எனவே இவர்கள் விடயத்தில் பொதுமக்கள் தங்களுக்குள் முரண்பட்டுக் கொள்ளாது மூத்த தலைவர்கள், விகரதிபதிகள், பீடாதிபதிகளின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் ஏனைய மதங்களுக்கிடையிலான தங்களின் இணக்கப்பாட்டை அதிகரித்துகொள்வதே தற்போதைய காலகட்டத்தின் மிக முக்கிய தேவையாகக் கருதப்படுகிறது.அதன் மூலமே எதிர்கால சந்ததிக்கு ஒரு வளமான இலங்கை நாட்டிற்கு எம்மால் அத்திவாரமிட முடியும் என்பதில் மற்றுக்கருத்துக்கிடையாது.ZN
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :