( எம்.எம். கடாபி )
கல்முனை மாநகர சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்
ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ்வின் வீட்டின் மீது இன்று திங்கட்கிழமை அதிகாலை
1.30 மணியளவில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார்
தெரிவித்தனர்.
உள்ளூரில் தயாரிக்கப்பட்ட வெடிபொருட்களை பயன்படுத்தியே இந்தத் தாக்குதல்
மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மத்ரஸா வீதியில் அமைந்துள்ள தனது வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட இந்தத்
தாக்குதலின்போது வீட்டின் யன்னல் கண்ணாடிகளும் நீர்க்குழாய் இணைப்பும்
சேதமடைந்துள்ளதுடன், வீட்டுச் சுவர்களிலும் நுழைவாயில் கதவிலும்
துவாரங்கள் ஏற்பட்டுள்ளதாக கல்முனை மாநகர சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ் தெரிவித்தார்.
இந்தத் தாக்குதல்ச் சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸில் முறைப்பாடு
செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு
வருகின்றனர்.

0 comments :
Post a Comment