ஏ.எச்.எம் இம்தியாஸ் இறக்காமம்.
இறக்காமம் ஜும்ஆ பெரிய பள்ளிவாயலில் 2013.06.02ம் திகதி அஸர் தொழுகை முதல் இஷா வரை மாபெரும் குடும்ப இஜ்திமா நடைபெற்றது.
அஷ்ஷெய்க் ஐ.றஷீன் (அன்வாரி) அவர்களின் தலைமையில் 'நன்மை செய்யும் சமூகமே வெற்றி பெறும் சமூகம்' எனும் கருப் பொருளில் இடம் பெற்ற இந் நிகழ்வில் 'இணக்காமான வாழ்வு இனிய சுவனம்' எனும் தலைப்பில் தேசிய ஒருங்கிணைப்புப் பகுதி – பகுதி பொறுப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.உவைஸ் (இஸ்லாஹியா) அவர்களினால் உரையாற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 'மனித சமூகத்தின் ஆக்கமும் அழிவும்' எனும் தலைப்பில்; நீதிக்கும் சமாதானத்திற்க்குமான முன்னனிப் பொறுப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.நஜா முஹம்மத் (இஸ்லாஹியா) அவர்களினால் உரையாற்றப்பட்டது.
இறுதியாக 'நன்மை செய்யும் சமூகமே வெற்றி பெறும் சமூகம்' எனும் கருப் பொருளில் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் (அமீர், இலங்கை ஜமாஆத்தே இஸ்லாமி) அவர்களினால் உரையாற்றப்பட்டது.


0 comments :
Post a Comment