காத்தான்குடி பாலமுனை பிரதேசத்தில் கைத்தறி நூல்களுக்கு டையிடும் நவீன நிலையம்.


பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் MLAM. ஹிஸ்புல்லாஹ் அவர்களின் வேண்டுகோளின் பேரில் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சரும், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவருமான றிஸாட் பதியுதீன் அவர்களின் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில், கைத்தறி நூல்களுக்கு டையிடும் நவீன நிலையம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளது.

பாரம்பரிய கைத்தொழில்களுக்கு புத்துயிர் வழங்கும் நோக்குடனும் நெசவுத் தொழிலாளர்களின் கைத்தொழிலை நவீன முறையில் முன்னேற்றுவதற்கும் அவர்களின் உற்பத்திகளை உள்நாட்டிற்கும் வெளிநாட்டிற்கும் சந்தைப்படுத்துவதற்கு ஏதுவான முறையில் ஆடை தயாரிப்புக்களை தரப்படுத்துவதற்கும் இந்நிலையம் மூலம் நன்மைபயக்கும்.

கிழக்கிலங்கையில் குறிப்பாக முஸ்லிம் பிரதேசங்களில் நெசவுத் தொழில் பாரம்பரியமாக செய்யப்பட்டு வருவது யாவரும் அறிந்தவிடயம். கடந்த யுத்த சூழ்நிலைகளினாலும் சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்களினாலும், உள்ளுர் தயாரிப்புகளுக்கு சந்தை வாய்ப்பின்மை போன்றவற்றினாலும், இக் கைத்தொழில் பின்தள்ளப்பட்டு வருகின்றது.

இதனை கவனத்தில் கொண்ட கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிஸாட் பதியுதீன் இத்தொழிலை நவீனமயப்படுத்தி நெசவுக்கைத்தொழிலாளர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கான உதவிகளை தமது அமைச்சின் மூலம் பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் அமைச்சின் 18 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், நெசவுத் தொழிலுக்கு இன்றுவரை பெயர்பெற்ற மருதமுனை கிராமத்தில் இந் நவீன நிலையத்தினை அமைப்பது கௌரவ அமைச்சரின் கனவாக இருந்தது.

 இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கௌரவ அமைச்சரின் பணிப்பின் பெயரில் அமைச்சின் மேலதி செயலாளர் தலைமையில் உயர்மட்ட குழுவொன்று மருதமுனை கிராமத்துக்கு விஜயம் மேற்கொண்டு பிரதேச செயலாளர்களுடன் இணைந்து இந்நிலையத்தினை அமைப்பதற்கான காணியை இனங்காண்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இருந்தபோதிலும் காணி இனங்காண்பதில் பாரிய பிரச்சினைகளையும் விமர்சனங்களையும் எதிர்கொண்டு இறுதியில் இத்திட்டத்தினை கைவிடும் நிலை ஏற்பட்டது. அரச நிதிகள் ஒதுக்கப்பட்ட வருடத்துக்குள் செலவு செய்யாவிட்டால் அது மீண்டும் திறைசேரிக்கு திரும்பிவரும் என்பது யாவரும் அறிந்த விடயம்.

இன,மத, கட்சி, அரசியலுக்கப்பால் சமூகத்தின் விடிவுக்காக அயராது உழைக்கும் கௌரவ அமைச்சர் அவர்களின் கனவு நனவாகாமல் வெறும் அரசியல் காரணங்களுக்காகவும் தூரநோக்கற்ற சிந்தனையாளர்களின் செயல்பாடுகளினாலும் தடைப்பட்டுப்போனது மனவேதனைகக்குரிய விடயமாகும்.

இருந்தபோதிலும் தொடர்ந்தும் இக்கைத்தொழிலையும்,கைத்தொழிலாளர்களையும் பாதுகாக்கும் நோக்குடன் இந் நிலையத்தினை வேறு பிரதேசங்களுக்கு கொண்டு செல்ல பல சக்திகள் எடுத்துக்கொண்ட முயற்சிக்கு மத்தியிலும் கிழக்கிலங்கையில் முஸ்லிம் பிரதேசங்களில் முடக்கப்பட்டிருக்கும் நெசவுத்தொழிலை பாதுகாக்கும் நோக்குடனும், கௌரவ அமைச்சர் அவர்களின் ஆலோசனையின் பிரகாரம் பொருளாதார பிரதி அமைச்சரும் மட்டக்களப்பு அபிவிருத்திக் குழு தலைவருமான MLAM. ஹிஸ்புல்லாஹ் அவர்களின் வேண்டுகோளின் பேரில் இந்நிலையம் நெசவுத் தொழிலை பாரம்பரியமாக செய்துவரும் இன்னுமொரு கிராமமான பாலைமுனை பிரதேசத்தில் அமையவிருப்பது சற்று ஆறுதலாக உள்ளது.

குறிப்பாக கிழக்கில் முஸ்லிம் பிரதேசங்களில் காணிப்பிரச்சினை, இடப்பற்றாக்குறை இருந்து வருவது யாவரும் அறிந்தவிடயம். இருப்பினும், விட்டுக்கொடுப்போடு சில நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இவ்வாறான நன்மை பயக்கும் திட்டங்களில் முஸ்லிம்களின் பொருளாதாரம் பாதுகாக்கப்படும். இதன்மூலம் பல இளம் சிறிய முதலீட்டாளர்கள் நன்மையடைவர் என்பதோடு மறக்கடிக்கப்பட்டுவரும் பாரம்பரிய கைத்தொழில் புத்துயிர் பெற வாய்ப்புள்ளது. அது மட்டுமல்லாமல் இந் நவீன நிலையத்தின் மூலம் உள்ளுர் தயாரிப்புக்கள் நவீனமுறையில் வடிவமைக்கப்பட்டு சர்வதேச ஏற்றுமதிக்கும் வாய்ப்பாக அமையலாம்.

எனவே, இத்திட்டம் சிறிய சிறிய காரணங்களுக்காக கைவிடப்படாமல் இன்னுமொரு முஸ்லிம் கிராமத்தில் அமையப்பெறுவது எமக்கு பெருமையாக உள்ளதோடு, இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட கௌரவ அமைச்சர் றிஸாட் பதியுதீனுக்கு எமது மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும் என்றும் சமாதான நீதவான் மபூஸ் அஹமட் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். KI
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :