ஏ.எல்.எம்.நயீம்
கிழக்கு மாகாண விவசாய மற்றும் கால்நடை உற்பத்தி அபிவிருத்தி கிராமியக் கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி, சுற்றுலாத்துறை அமைச்சின் மூலம் வருடாந்தம் அபிவிருத்தி செய்யப்படும் கிராமங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையில் உள்ள மங்களகம கிராமம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மகாஓயா - அம்பாறை வீதியில் அமைந்துள்ள எல்லைக் கிராமமான மங்களகம கிராமத்திற்கு கிழக்கு மாகாண விவசாய மற்றும் கால்நடை உற்பத்தி அபிவிருத்தி கிராமியக் கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி, சுற்றுலாத்துறை அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட் விஜயம் செய்து அங்குள்ள குறைபாடுகளை கேட்டறிந்து கொண்டதுடன் இப்பிரதேச விவசாயிகளுக்கு விவசாய தேவைகளுக்கான உதவிகளையும் வழங்கி வைத்தார்.
இங்கு விஜயம் செய்த அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டை மங்களகம மஹா விகாரையின் மஹாவிகாராபதி சங்கைக்குரிய பூஜ்ஜிய தெஹிகம ஞானரத்ன தேரர் வரவேற்று பேசினார். இவர் தனது பேச்சின் போது தேர்தல் காலங்களில் வாக்குக்கேட்பதற்கென்றே வரும் அரசியல் வாதிகளi நான் கண்டிருக்கின்றேன். ஆனால் அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டோ தேர்தல் காலங்களில் இங்கு வந்து வாக்கு கேட்காமல் வெற்றி பெற்று இன்று இங்கு எங்களைத் தேடி உதவிகளை செய்ய வேண்டுமென வந்திருப்பதையிட்டு எமது சிங்கள சமூகம் பெருமையோடு அவரை வரவேற்பதுடன் எதிர்காலத்தில் எங்களது பூரண ஆதரவையும் வழங்குவோம் என கூறினார்.
இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்கள் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜாதி, மத, இன பேதமின்ற எல்லோரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர் என பணியாற்றி வருகின்றார்.

அவரை பின்பற்றி நானும் எமது கட்சியும் ஜாதி மத ,இன பேதமின்றி சேவையாற்றி வருகின்றோம். இந்த அடிப்படையிலேயே இந்த கிராமத்துக்கு தேர்தல் காலங்களில் வாக்குகள் கேட்டு வராவிட்டாலும் நீங்களும் என்னுடைய மக்கள் என்ற எண்ணத்தோடு இங்கு வந்து உங்களது குறைகளை கேட்டறிந்து கொண்டேன்.
மேலும் எமது அமைச்சின் மூலம் மாவட்டத்துக்கு ஒரு கிராமத்தின் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மங்களகம கிராமத்தில் உள்ள குறைபாடுகள் அணைத்தையும் நிவர்த்தி செய்து அபிவிருத்தி செய்ய முடிவு செய்துள்ளோம் எனவும் கூறினார்.
இந்த விஜயத்தின்போது அமைச்சின் செயலாளர் கே.பத்மநாதன், மாகாண விவசாய பணிப்பாளர் எம்.ஹுசைன், மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் ரா.ஹரிகரன், அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் டி.எம்.எஸ்.பி.திஸ்ஸாநாயக்க, மங்களகம விவசாய உத்தியோகஸ்தர் வை.எம்.குசும் பண்டார, மஹாஓயா விவசாய உத்தியோகஸ்தர் என்.திலுகா நதீஸா உட்பட அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் பண்ணையாளர்களும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment