வீடொன்றில் தங்கியிருந்த பெண் பிக்குவும், பிக்கு மற்றும் இளைஞன் யுவதி கைது.


ந்தேகத்திற்கிடமான முறையில் வீடொன்றில் தங்கியிருந்த பிக்கு, இரு யுவதிகள் மற்றும் ஒரு இளைஞன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (13) இரவு குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் தங்கியிருந்த வீட்டைச் சுற்றிவளைத்து சுமார் 50 பேர் வரை நின்றதாகவும் பொலிஸார் அவ்விடத்திற்குச் சென்று வீட்டில் தங்கியிருந்தவர்களை கைது செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிக்கு கம்பஹா மாவட்டத்தையும் இளைஞன் வென்னப்புவ பகுதியையும் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இவர்களோடு பெண் பிக்கு ஒருவரும் யுவதியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வீடு பெண்களை தவறாக வழிநடத்துவதற்கென கூலிக்கு வழங்கப்பட்டு வருவதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :