தான் தீப்பற்றி எரியும் நிலையில் முன்னாள் கணவனை கட்டிப் பிடித்த பெண்.


பொரலந்த ஸ்ரீ நாராங்கல பிரதேசத்தில் விவாகரத்து பெற்ற மனைவி மீது பெற்றோல் ஊற்றி தீயிட்ட போது அந்த நபரை பாய்ந்து கட்டிப்பிடித்ததால் இருவரும் கடுமையான தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த நபர் சில காலத்துக்கு முன்னர் விவாகரத்து பெற்றுள்ளார். ஏதோவொரு பிரச்சினையைத் தீர்க்க பொரலந்த பிரதேசத்திலுள்ள முன்னாள் மனைவியின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு இருவருக்குமிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டதை அடுத்து அந்நபர் முன்னாள் மனைவியின் மீது பெற்றோலை ஊற்றி தீயிட்டுள்ளார்.

தீப்பற்றி எரியும் நிலையில் அந்தப் பெண் பாய்ந்து முன்னாள் கணவனை கட்டிப் பிடித்ததால் இருவரும் கடுமையான தீக்காயங்களுடன் தியதலாவ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பொரலந்த பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயது பெண்ணும் மாதொட்டில்ல பிரதேத்தைச் சேர்ந்த 55 வயது நபருமே இவ்வாறு தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டவர்களாவர். வெலிமடை பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :