மண்டேலா இருக்கும் வைத்தியசாலைக்கு முன்னால் ஒபாமாவுக்கு எதிராக ஆர்பாட்டம்


தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா அனுமதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலையை அண்மித்த பகுதிகளில் அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

ஆபிரிக்க நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாபதி பராக் ஒபாமா நெல்சன் மண்டேலாவை பார்வையிட வரக்கூடும் என்ற நோக்கில் இந்த ஆரப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுமார் 200ற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் தென்னாபிரிக்க கம்யூனிசக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் மாணவர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதியின் வெளியுறவுத்துறை கொள்கையானது, சுயநலமானதும் ஒடுக்குமுறைகள் நிறைந்ததாக உள்ளதென அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் அமெரிக்க ஜனாதிபதியின் இந்த விஜயமானது , ஏமாற்றமளித்துள்ளதெனவும் தமது தலைவர் மண்டேலாவிற்கும் பராக் ஒபாமாவின் விஜயமானது ஏமாற்றத்தையே அளிக்கும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை ஆறு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஆபிரிக்க நாடுகளுக்கு சென்றுள்ள அமெரிக்க ஜனாதிபதி, நெல்சன் மண்டேலாவை பார்வையிட்டு அவர்களின் குடும்பத்தாருக்கு நெருக்கடியை ஏற்படுத்த விரும்பவில்லை என குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் அவரை பார்வையிட்டு புகைப்படங்கள் எடுப்பதற்கும் இது தருணமில்லை எனவும் அமெரிக்க ஜனாபதி பராக் ஒபாமா நேற்றைய தினம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :