
திருமண வரவேற்பு நிகழ்ச்சியை, ரத்த தான முகாமாக மாற்றிய, புதுமண ஜோடிக்கு, பலரும் பாராட்டு தெரிவித்தனர்.
ஒடிசாவின், கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள சந்தோல் என்ற கிராமத்தில், நேற்று முன்தினம், சுவந்துகுமார் பிரதாப், 26, என்ற மணமகனுக்கும், சுசித்ரா என்ற பெண்ணுக்கும், திருமணம் நடந்தது.
நேற்று காலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. ருசியாக சாப்பிட்டு, மணமக்களை வாழ்த்தலாம் என, வந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு, அதிர்ச்சி காத்திருந்தது.
திருமண மண்டபத்தில், ரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மணமகன் பிரதாப், முதல் நபராக ரத்த தானம் செய்து, முகாமை துவக்கி வைத்தார்; மணமகளும் அவரை தொடர்ந்தார்.
உற்றார், உறவினர்கள், நண்பர்கள், அவர்களைத் தொடர்ந்து, ரத்த தானம் செய்தனர். முதலில் தயங்கிய பலரும், பின் மனமுவந்து தானம் செய்தனர்.
மிக புதுமையான முறையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்திய
மணமக்களை, பலரும் பாராட்டினர். ரத்த தான முகாம் ஏற்பாடுகளை, அமா ஒடிசா என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
0 comments :
Post a Comment