ஐபிஎல் சூதாட்டம் தொடர்பில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரிடம் பொலிசார் விசாரணை.

பிஎல் சூதாட்டம் தொடர்பாக ராஜஸ்தான் றொயல்ஸ் அணியின் உரிமையாளரும், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருமான ராஜ் குந்த்ராவிடம் டெல்லி பொலிசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

அவரது தொழில் கூட்டாளியும், நண்பருமான உமேஷ் கோயங்காவும் விசாரணைக்கு உள்ளானார்.

ராஜஸ்தான் றொயல் அணியின் பங்குகளில் 11.7 சதவீதம் தன்னிடம் உள்ளதாக பொலிஸ் விசாரணையில் ராஜ் குந்த்ரா தெரிவித்துள்ளார்.

சந்தேகத்தின் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதா அல்லது புகார் அளித்தவர் என்ற முறையில் விசாரணை நடைபெற்றதா என்பது குறித்து பொலிஸார் தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.

ஐபிஎல் போட்டியின்போது ஆடுகளத்தின் தன்மை குறித்த விவரங்களை உமேஷ் கோயங்கா, தன்னிடம் கேட்டார் என்று ராஜஸ்தான் அணி வீரர் சித்தார்த் திரிவேதி சமீபத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :