இன்றைய ஆட்டத்தில் இலங்கை வெற்றி பெற்றால் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் கடைசி லீக் போட்டியில், இன்று ஏ பிரிவில் உள்ள இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன. 

அரை இறுதியில் நுழைய இரு அணிகளுமே இந்த ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. 

இலங்கை அணி 2 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகளைப் பெற்றுள்ளது. 

இன்றைய ஆட்டத்தில் இலங்கை வெற்றி பெற்றால் அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிடும். நியூசிலாந்து, அவுஸ்திரேலியா அணிகள் வெளியேற்றப்படும். 

அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றால் இலங்கை அணி வெளியேற்றப்படும். அந்த அணியும், நியூசிலாந்தும் தலா 3 புள்ளிகளுடன் சமநிலையை பெறும். 

ஓட்ட விகிதத்தின் அடிப்படையில் ஒரு அணி அரை இறுதியில் நுழையும். அவுஸ்திரேலியாவை விட நியூசிலாந்து ஓட்ட விகிதத்தில் முன்னிலையில் உள்ளது. 

இதனால் இன்றைய ஆட்டத்தில் அவுஸ்திரேலியா அணி இலங்கையை அதிக ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாய நிலை காணப்படுகின்றது. 

சிலவேளைகளில், இன்றைய போட்டி மழையால் இரத்து செய்யப்பட்டால் அவுஸ்திரேலியா வெளியேற்றப்படும். 

இலங்கை, நியூசிலாந்து அணிகள் தலா 3 புள்ளிகள் பெறும். இலங்கையை விட ஓட்ட எண்ணிக்கையில் நியூசிலாந்து நல்ல நிலையில் இருப்பதால் அந்த அணி தகுதி பெறும் வாய்ப்புக்கள் அதிகம். 

இன்றைய ஆட்டத்திலும் அவுஸ்திரேலிய அணியில் கிளார்க் ஆடுவது சந்தேகமே.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :