(கல்முனை நிருபர் )
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 18வது வருடாந்த மாநாடு எதிர்வரும்
29.06.2013 சனிக்கிழமை காலை 9 மணிக்கு கொழும்பு-03 ரன்முத்து ஹோட்டலில்
நடைபெறவுள்ளதாக அதன் பொதுச்செயலாளர் எம்.ஏ.எம். நிலாம் தெரிவித்தார்.
இம்மாநாட்டில் சட்டமா அதிபர் பாலித பெர்ணான்டோவும், சிறப்பு பேச்சாளராக
ஜாமிஆ நளீமிய்யாவின் பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரியும் கலந்து
கொள்ளவுள்ளனர்.
இரு அரங்குகளாக நடைபெறும் இம்மாநாட்டில் பொது அமர்வின்பின் வருடாந்த
மாநாடு நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டின்போது, சமூகத்திற்கும், ஊடகத்துறைக்கும் பாரிய
பங்களிப்புக்களைச் செய்த பலர் கௌரவிக்கப்படவுள்ளனர்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் சகல அங்கத்தவர்களும் இம்மாநாட்டில்
கலந்துகொண்டு உத்துழைப்பு வழங்குமாறு பொதுச்செயலாளர்
வேண்டிக்கொள்கின்றார்.

0 comments :
Post a Comment