அஷ்ரபின் மரணத்தின் மர்மம்! முஸம்மிலின் கருத்துக்கு கடும் கண்டனம்-சட்டத்தரணி கபூர்

ஷ்ரபின் மரணத்தின் மர்மமும், ஹக்கீமின் தலைமைத்துவமும் பற்றிய முஸம்மிலின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறார்

- மு.கா. ஸ்தாபகச் செயலாளர் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர்

அண்மையில் தேசிய சுதந்திர முண்ணனியின் பேச்சாளர் முஹம்மட் முஸம்மில் அவர்கள் பத்திரிகையாளர் மகா நாட்டில் பேசுகையில் அமைச்சராக இருந்த முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் அஷரப் அவர்களின் திடீர் விபத்தின் மரணத்திற்கு பின்னர் ஹக்கீம் இக்கட்சியின் தலைமைத்துவத்தை சூழ்ச்சி செய்து கைப்பற்றியதாகவும் அந்த மரணத்தில் தனக்கு இன்னும் சந்தேகம் இருப்பதாகவும் ஊடகங்களுக்குத் தெரிவித்திருப்பதை மிகவும் வண்மையாக நாம் கண்டிக்கின்றோம்.

இது முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சு போட முஸம்மில் முனைந்துள்ளார் என முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகப் பொதுச் செயலாளரும். மஜ்லிஸ் சூறாவின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எஸ்.எம்.ஏ கபூர் அவர்கள் பத்திரிகைகளுக்கு விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இப்போதைய மு.கா.வின் தலைவராக இருக்கின்ற அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களை அப்போதைய கட்சியின் அரசியல் உயர்பீடம் ஒன்று கூடி ஏகமானதாக எடுத்த தீர்மானத்தின் படியே அவர் தெரிவு செய்யப்பட்டார் அதில் எவ்வித சூழ்ச்சியோ நாசகார சதி வேலைகளோ, திட்டவட்டமாக இடம்பெறவில்லை என்பதை இந்நாடு நன்கு அறியும் இதனை முஹம்மட் முஸம்மில் அவர்கள் அறிந்திருக்க வேண்டும்.

அகால மரணமான அஷ;ரப் அவர்களை அடக்கம் செய்துவிட்டு கட்சிக்கான தலைவரை நியமிப்பது சம்பந்தமாக கூட்டப்பட்ட அரசியல் உச்ச பீட உறுப்பினர்கள் கலந்துகொண்ட விஷேட கூட்டம் கட்சியின் தலைமைக் காரியாலயமான 'தாருஸ்ஸலாம்' மண்டபத்தில் அன்று நடைபெற்ற போது கட்சித் தலைவர் பதவிக்கு பொருத்தமான தலைவர் ஒருவரை தெரிவு செய்வதில் பல தரப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன முதலில் முக்கூட்டுத்தலைமைத்துவம் பற்றியும் யோசிக்கப்பட்டு இறுதியில் இணைத்தலைவராக இருவரை நியமிப்பதாகவும் அதில் சகோதரர் ரவூப் ஹக்கீம் அவர்களையும், சகோதரி பேரியல் அஷரப் அவர்களையும் கட்சியின் இணைத்தலைவர்களாக நியமிப்பது என அக்கூட்டத்தில் அன்று ஏகமானதாக தீர்மானிக்கப்பட்டது.

சில காலங்களின் பின்பு நாட்டில் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை காரணமாக மு.கா. தனிப்பெரும் தலைவராக ரவூப் ஹக்கீம் அவர்களும் தேசிய ஐக்கிய முண்ணனியின் (நு.ஆ) வின் தலைவியாக சகோதரி பேரியல் அஷ;ரப் அவர்களும் இவ்விரண்டு கட்சிகளுக்கும் வௌவேறு தலைவர்களாக இருந்து செயற்படுவதாக இணக்கம் காணப்பட்டது. இவ்விடயத்தில் பிரபல ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா உட்பட பலர் இதன் பிண்ணனியில் சமூக நலன் கருதி முன்னின்று செயற்பட்டார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இப்படித்தான் மு. கா. வின் தலைவராக ரவூப் ஹக்கீம் அவர்கள் நியமிக்கப்பட்டார் இது படிப்படியாக பல பதவிகளை கட்சிக்குள் வகித்து வந்த அவர் இறுதியல் இத்தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 

 இது ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்டு வழங்கப்பட்ட பதவியே அன்றி மாறாக மறைந்த தலைவரின் மரணத்தின் மர்மத்தில் தற்போதைய தலைமைத்துவத்திற்கு எள்ளலவேனும் எவ்வித சச்சரவுகளோ சந்தேகங்களோ சதிகளோ நடந்ததாக கூறப்படும் சம்பவம் எதுவும் அப்போதும்மில்லை இப்போதும்மில்லை எப்போதும்மில்லை என்பதை மிகவும் அழுத்தம் திருத்தமாக இங்கு நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

இந்த உண்மைகளை உலகிற்கு உணர்த்த வேண்டிய தார்மிகப் பொறுப்பு எங்களுக்கும் உண்டு என்பதனால் முஸம்மில் போன்றவர்கள் மட்டுமல்ல ஏனைய எல்லோரும் அறிந்திருப்பது அவசியமாகும். ஏனெனில் அந்த குறிப்பிட்ட கூட்டத்தில் பங்குபற்றி இத்தலைவரைத் தெரிவு செய்தவர்களில் நானும் ஒருவன் என்பதனால் இதனை எழுதும் பொறுப்பு எனக்குண்டு என எண்ணுகிறேன். 

ஏனென்றால் இன்றைய முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய முன்வரிசை உறுப்பினர்கள் பலர் அக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் அருகதை அன்று அவர்களுக்கு இருக்கவில்லை என்பதுடன் அப்பொழுது எங்களுடன் இருந்த இன்னும் சிலர் இன்று இக்கட்சியில் இல்லை என்பதும் வேறுவிடயம்.

மேலும் 13வது திருத்த சட்ட மூலத்தை அழிப்பதற்கு எதிராக எடுக்கும் முடிவு முஸ்லிம் காங்கிரஸின் பேராளர்கள் மகா நாட்டில் ஏகமானதாக

ஏற்கனவே எடுக்கப்பட்டு தீர்மானிக்கப்பட்ட விடயமேயன்றி இது தலைவரினால் தன்னிச்சையாக தனியாக எடுத்த முடிவல்ல என்பதையும் முதலில் முஹம்மட் முஸம்மில் அவர்களுக்கு தெளிவு படுத்த விரும்புகிறேன்.

எனவே முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மீது தொடர்ந்து அபாண்டமாக சேறு பூசுவதை இந்த சில்லறை அரசியல் முஸ்லிம் முகவர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் மு.கா வின் தலைமைத்துவத்திற்கு அரசியல் பாடம் புதிதாக புகட்டி புத்திமதி கூறும் உங்களின் கையாலாகாத கைங்கரியத்தை கைவிடவேண்டும் எனவும் உங்கள் உபதேசங்களையும் தனிப்பட்ட எதிர்பார்ப்புகளையும் எங்களிடம் திணிக்கவேண்டாமெனவும் வேண்டிக்கொள்கிறேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :