ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாலமுனை மத்திய குழுவின் ஏற்பாட்டில் முப்பெரு விழா.



(எம்.பைஷல் இஸ்மாயில்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாலமுனை மத்திய குழுவின் ஏற்பாட்டில் இலவச குடிநீர் இணைப்பு, பள்ளி வாசல்களுக்கு நிதி உதவி மற்றும் தொழில் நியமனம் வழங்கிய தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோரை பாராட்டி கௌரவிக்கும் முப்பெரு விழா நேற்று (2013.06.22) இரவு 7.30 மணியளவில் பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பாலமுனை மத்திய குழுவின் தலைவர் ஐ.எல்.சுலைமாலெப்பை தலைமையில் இடம்பெற்றபோது பிரதம அதிதியாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றஊப் ஹக்கீம், கௌரவ அதிதியாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், விஷேட அதிதிகளாக கிழக்கு மாகாண அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.ஜெமில், ஏ.எல்.தவம், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில், உதவித் தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா, மு.காவின் பிரதித் தலைவர் முழக்கம் அப்துல் மஜீட், மு.காவின் ஸ்தாபகச் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர், யூ.எம்.வாகீத் சேர், பாலமுனை மத்திய குழு செயலாளர் எம்.ஏ.சதார் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


இதன்போது பாலமுனை முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவின் முயற்சியினால் பாலமுனை மற்றும் ஒலுவில் பிரதேசத்தில் வசிக்கும் 561 வறிய குடும்பங்களுக்கு சுமார் 29 இலட்சம் ரூபா நிதியில் இலவச குடிநீர் வசதியைப் பெற்றுக்கொள்ளும் பற்றுச்சீட்டு மற்றும் பாலமுனை பிரதேசங்களில் உள்ள பள்ளிவாசல்களுக்கான நிதி உதவிகளையும் அமைச்சர் றஊப் ஹக்கிம் வழங்கி வைத்தார்.

இதேவேளை பாலமுனை பிரதேசத்தில் தொழில் வசதிகளை பெற்ற இளைஞர்கள் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுத்த அமைச்சர் றஊப் ஹக்கீம் மற்றும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் ஆகியோரை பாராட்டி, பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

இந்த முப்பெரு விழாவுக்கு பாலமுனை, அட்டாளைச்சேனை மற்றும் ஒலுவில் பிரதேசங்களில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தப்போதுள்ள சமகால அரசியல் நிலவரங்களை அறிந்து கொள்ளும் ஆவலுடன் காணப்பட்டமையும் தற்போது அரசாங்கம் மேற்கொண்டு வரும் சிறுபான்மை இணத்தவரின் மாகாண அதிகாரங்களை பிடுங்கும் முயற்சியில் 13 ஆவது திருத்தச்சட்ட மாற்றம் குறித்து ஆராய ஆளும் தரப்பில் 19 உறுப்பினர்கள் கொண்டு அமைக்கப்பட்ட இந்த விசேட குழுவில் முஸ்லிம் காங்கிரசை ஏன் ஓரம்கட்டியது என்ற செய்தியையும் கேட்கவேண்டும் என்ற நோக்கில் இரவு 12.30 மணிவரை எதிர்பார்த்தும் இக்கூட்டம் நடைபெறும்போது இடையிடையே மழைத் துளிகள் விழுந்ததைக்கூட பொறுப்படுத்தாது தலைவரின் பேச்சை கேட்டு மிக ஆவலுடன் காணப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :