( எம்.ஏ.எம். ஹூசைன் )
ஐக்கிய தேசியக்கட்சி தனது சரிந்துபோன அரசியல் செல்வாக்கை
பெளத்தர்களிடையே துாக்கி நிறுத்துவதற்கு பௌத்த இனவாதிகளின்
அநீதிகளுக்கும் அடக்கு முறைகளுக்கும் துணைபோயுள்ளது என ஸ்ரீ லங்கா
முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் றம்ழான்
தெரிவித்துள்ள கருத்தானது கண்டிக்கத்தக்கதாகும். என ஐக்கிய
தேசியக்கட்சியின் அம்பாரை மாவட்ட முஸ்லிம் பிரதேச பிரச்சாரச் செயலாளர்
எஸ்.அப்துஸ் ஸலாம் தெரிவித்தார்.
ஊடகங்களில் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் றம்ழான் ஐக்கிய தேசியக்கட்சியை
விமர்சித்தமை தொடர்பாக கருத்து வெளியிடும்போது தொடர்ந்தும் அவர்
குறிப்பிடுகையில்,
தனது செல்வாக்கை அதிகரித்துக்கொள்வதற்காக ஐக்கிய தேசியக்கட்சிக்கு
காவியுடை தரித்தவர்களின் முதுகில் பயணித்து, இனவாதத்தை துாண்டி அரசியல்
செய்ய வேண்டும் என்ற எந்தத்தேவையும் கிடையாது.
மாறாக இந்த கைங்கரியத்தை அரசாங்கமே செய்து கொண்டிருக்கின்றது. என்பது
உலகமறிந்த விடயம். இந்த அரசாங்கத்தில் முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்து,
உரிமைகளைப் பேசுவதாகவும், உரிமைகளை பெற்றுக்கொடுப்பதாகவும்
கூறிக்கொண்டிருப்பவர்களும் ஒட்டிக்கொண்டிருக்கும் நிலையில்தான்
முஸ்லிம்களுக்கு எதிராக சகல பிரச்சினைகளும்
அரங்கேறிக்கொண்டிருக்கின்றது.
இதற்காக தீர்க்கமான முடிவுகளை எடுக்க முஸ்லிம் காங்கிரசோ ஏனைய முஸ்லிம்
கட்சிகளோ முன்வராத நிலையில் ஐக்கிய தேசியக்கட்சி மட்டுமே தற்போது
மிகச்சிறப்பாக குரல் கொடுத்து வருகிறது, இதனை எதிர்த்து வீதியிலிறங்கி
ஆர்ப்பாட்டங்களை நடத்தியேனும் வெளியுலகிற்கு காட்ட நாம் பின்நிற்கவில்லை.
என்பதை றம்ழான் போன்ற அரசியல்வாதிகள் மிகத்தெளிவாகப் புரிந்து கொள்ள
வேண்டும்.
இவைகளை மறந்து முன்னாள் மாநகர சபை உறுப்பினர் றம்ழான் அவர்கள் ஐக்கிய
தேசியக் கட்சியைச்சாடி அறிக்கை விடுவது யாருடைய சரிந்துபோகின்ற அரசியல்
செல்வாக்கை துாக்கி நிறுத்துவதற்காக என்று கேட்க விரும்புகின்றேன்.
முஸ்லிம்களினுடைய பிரச்சினைகளை மாற்று இனத்தவராக இருந்து கொண்டு
தயங்காமல் பாராளுமன்றிலே குரல் கொடுக்கும் அளவிற்கு துணிச்சல் மிக்கவராக
இருக்கிறார். அவர் குரல் கொடுக்கும்பொழுது அதனை எதிர்த்தவர் ஸ்ரீ லங்கா
முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீம் ஆவார். என்பதையும் றம்ழான்
ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். அதனைத்தொடர்ந்து செய்தியாளர் மாநாடு,
அறிக்கைகள் என்று அவ்வச்சந்தர்ப்பங்களில் 35 தடவைகளுக்கு மேல் ஐக்கிய
தேசியக்கட்சியின் தலைவர் றணில் விக்கிரமசிங்க மட்டுமல்லாது எமது
கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் முஸ்லிம்களுக்காக குரல்
கொடுத்துள்ளார்கள்.
இவ்வாறு எமது தலைமைத்துவம் செயலாற்றிக்கொண்டிருக்கின்ற பொழுது
உண்மையறியாமல் சிறுபிள்ளைத்தனமாக பேசுவதை வன்மையாக கண்டிக்கிறேன் என்றும்
குறிப்பிட்டுள்ளார்.

+abdus+salam+Unp.jpg)
0 comments :
Post a Comment