பொதுப் பலசேனா அமைப்பை பகிரங்கமாக மிக விரைவில் காத்தான்குடிக்கு அழைத்துவரவுள்ளேன் என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
இன்று புதன்கிழமை இரவு 08.00மணிக்கு காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் காரியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
அண்மைக்காலமாக எமது நாட்டில் பௌத்த பேரினவாத அமைப்புக்கள் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உலமாக்களை அங்கத்தவர்களாக கொண்ட அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவை பகிரங்கமாக விமர்சித்து வருகிறது.

குறிப்பாக பொதுபல சேனா என்ற பௌத்த பேரினவாத அமைப்பு முஸ்லிம்களின் வளர்ச்சியையும் அபிவிருத்திகளையும் பொருத்துக் கொள்ள முடியாது முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளிலும் அவர்களை முற்றாக ஒழிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு முஸ்லிம்களாகிய நாம் கொடுக்க வேண்டிய பதில் இவர்களைப் போன்றே நாமும் அவர்களை விமர்சிப்பதோ அல்லது ஆர்ப்பாட்ட மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதோ அல்ல.
மாறாக இதை ஓர் சிறந்த சந்தர்ப்பமாக பயன்படுத்தி இஸ்லாத்தைப் பற்றி மாற்று மதத்தவர்களிடத்திலே இருக்கின்ற சந்தேகங்களை கிள்ளியெறிய வேண்டும்.அண்மையில் நான் பாராளுமன்றத்திற்கு சென்ற போது அமைச்சர் சம்பிக்க ரணவக்க (தனிப்பட்ட ரீதியில்)என்னிடம் ஒரு கேள்வியை எழுப்பினார்.
நீங்கள் அதிக பள்ளிவாசல்களை கட்டுகிறீர்கள்.இருக்கின்ற பள்ளிவாசல்களை விசாலப்படுத்துகிறீர்கள். சிறுபான்மையினராக நீங்கள் இருந்தும் ஏன் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறீர்கள்? என கேள்வியெழுப்பினார்.
ஆதற்கு நான் முஸ்லிம்களை பொறுத்த வரையில் பள்ளிவாசல்கள் அதிகமாகத் தேவை.ஏனெனில் ஒவ்வொரு நாளும் ஐந்து நேரம் தொழ வேண்டிய கட்டாயப்பாடு அவர்களுக்கு உள்ளது.

ஒவ்வொரு கிழமையும் வெள்ளிக்கிழமை தினங்களில் குறிப்பிட்ட ஒரு நேரத்திற்குள் (சுமார்12.10 மணியிலிருந்து 1.10 வரை)சகலரும் ஜூம்ஆ என்ற தொழுகையை தொழுதே ஆக வேண்டும்.
ஊர் மக்கள் எல்லோரும் ஒன்றாக இணைந்து பள்ளிவாயலில் ஜூம்மாத் தொழுகையை நிறைவேற்றுவதற்கு பெரிய விசாலமான பள்ளிவாசல்களை கட்டுகிறோம்.இதற்கு மாறாக பெரும்பான்மை சமூகத்திற்கு எதிர்ப்புக் காட்ட வேண்டுமென்றோ அல்லது இந்த நாட்டை இஸ்லாமிய நாடாக மாற்ற வேண்டும் என்பதற்காக அல்ல என பதிலளித்தேன்.
தொடர்ந்து பௌத்தர்கள் ஒவ்வொரு நாளும் பன்சலைக்கு(விகாரைக்கு) போவதில்லை.கிழமையில் ஞாயிற்றுக் கிழமை போவார்கள்.அதுவும் சகலரும் செல்ல வேண்டும் கட்டாயமில்லை.அத்துடன் காலையிலிருந்து மாலை வரையில் விரும்பிய நேரத்தில் செல்லலாம்.ஆதலால் உங்களுக்கு பன்சலைகள் அதிகமாக கட்ட வேண்டிய தேவைப்பாடு இல்லை என கூறிய போது மதிப்புக்குரிய அமைச்சரால் பதிலளிக்க முடியவில்லை.
எனவே பௌத்தர்களில் சிலர் முஸ்லிம்களைப் பற்றி தவறான அபிப்பிராயம் கொண்டுள்ளனர்.
ஆகவே முஸ்லிம்களையும் மதரஸாக்களையும் பற்றி தப்பபிப்பிராயம் கொண்டுள்ள பொதுபல சேனா அமைப்பை முஸ்லிம்கள் செறிந்து வாழும் காத்தான்குடிப் பிரதேசத்திற்கு பகிரங்கமாக அழைத்து வந்து அரபு மதரஸாக்களுக்கு அழைத்துப் போய் நீங்கள் சொல்வதைப் போன்று ஜிஹாதுக்கான பயிற்சிகளோ,ஆயுதப் பயிற்சியோ இங்கு வழங்கப்படுவதில்லை என்பதை நேரடியாக காட்டவுள்ளதுடன் உலமாக்களை சந்திக்க வைத்து உலமாக்களுக்கும் அவர்களுக்குமிடையில் சிநேகபூர்வ உறவை ஏற்படுத்தவுள்ளேன்.
அப்போதுதான் அவர்களுக்கு மதரஸாக்களில் என்ன நடைபெறுகிறது.உலமாக்கள் என்ன செய்கிறார்கள் என்கின்ற உண்மையான நிலை புரியும்.இன்று எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில்தான் இப்படியான முஸ்லிம்களுக்கெதிரான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என குற்றஞ்சாட்டுகிறார்கள்.ஆனால் நாளைக்கு ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்தாலும் இதைவிட பயங்கரமாக இருக்கும்.
இன்று கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசமான காத்தான்குடியில் எமக்கு இவர்களால் பிரச்சினை கிடையாது.ஆனால் பௌத்தர்கள் பெரும்பான்மையான வாழும் பகுதிகளில் இப்படியான பேரினவாத அமைப்புக்களால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.
அண்மையில் நான் நுவரெலியாவுக்குச் சென்றிருந்த போது அங்குள்ள முஸ்லிம்கள் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினையை என்னிடம் எடுத்துக் கூறினார்கள்.
இது முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசமான காத்தான்குடியில் இருந்து மாத்திரம் பேச முடியாது. ஏனைய பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்களின் நிலைமைகளை அறிந்து இந்த விடயம் தொடர்பில் பேச வேண்டும்.
இந்த விடயத்தை நான் பேசியதைக் கூட சிலர் விமர்சிப்பார்கள்.விமர்சனங்களை நான் பெரிதளவு கணக்கெடுக்க மாட்டேன்.ஏனென்றால் பலவற்றை பார்த்து விட்டேன்.அதற்கு நான் முகம் கொடுக்க தயார் நிலையில் உள்ளேன்.
இன்று இலங்கையை ஓர் மியன்மாராக்கப் போகிறார்கள் என்று சிலர் சொல்கிறார்கள்.ஆனால் அதைவிடுத்து சிறுபான்மையினராக இருக்கின்ற முஸ்லிம்கள் எல்லோருக்கும் பூரண பாதுகாப்பை பெற்றுக்கொடுப்பதற்கான சகல முயற்சிகளையும் நான் எடுப்பேன் என பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேலும் தெரிவித்தார்.KI

0 comments :
Post a Comment