வைத்தியசாலையின் உபகரணங்கள் மாற்றமா நடவடிக்கை எடுப்பேன்-அமைச்சர் மன்சூர்


( எஸ்.அஷ்ரப்கான் )

சாய்ந்தமருது வைத்தியசாலையின் சத்திர சிகிச்கைப் பிரிவு உபகரணங்களை கபளிகரமாக வேறு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டமைக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கிழக்கு மாகாண சுகாதார, விளையாட்டுத்துறை மற்றும் தகவல்
தொழில்நுட்ப அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸினால் முன்னெடுக்கப்படும் 'திதுலன கல்முனை' ஒளிரும் கல்முனை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு கட்டிடத்திற்கு
அடிக்கல் வைக்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் என்.ஆரிப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும், நீதியமைச்சருமான அல்-ஹாஜ் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகவும்,

திகாமடுல்ல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமீல், ஏ.எல்.தவம் ஆகியோர் விசேட அதிதிகளாகவும், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஏ.பஸீர், எம்.ஐ.எம்.பிர்தௌஸ், ஏ.நஸார்தீன், முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட பொருளாளர் ஏ.சீ.யஹியாகான் மற்றும் வைத்தியசாலை
அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதில் விசேட அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்படி அவர் தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், சாய்ந்தமருது வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறை, சிற்றூழியர்
பற்றாக்குறை மற்றும் மருத்துவ உபகரணங்களின் தேவைகள் என்பன மிக விரைவில் நிவர்த்தி செய்து கொடுக்கப்படும்.

முஸ்லிம் காங்கிரஸின் தலைமை என்மீது நம்பிக்கை வைத்து இவ்வமைச்சுப் பதவியினை எனக்கு வழங்கியுள்ளது. அதனடிப்படையில் எனது சேவை கிழக்கிலுள்ள முஸ்லிம்களுக்கு மாத்திரமின்றி தமிழ், சிங்கள மக்களுக்கும் கிடைக்கும் என்பதை சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.

வைத்தியசாலைகளின் பணிகளை துரிதமாக செய்து கொள்வதற்காகவே வைத்தியசாலைகளில் அபிவிருத்திச் சபைகள் நிறுவப்பட்டுள்ளன. அதற்கமைவாக சாய்ந்தமருது வைத்தியசாலை அபிவிருத்திச் சபையின் செயற்பாடுகள் திருப்திகரமாக உள்ளதுடன் சபை அங்கத்தவர்கள் எனக்கு நன்கு பரீட்சயமானவர்கள். அவர்களின் நேரம், காலம், பணம் என்பவற்றை வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு செலவிடுவதனையிட்டு பாராட்டுகின்றேன்.

சாய்ந்தமருது வைத்தியசாலை கடந்த சுனாமி அனர்த்தத்தினால் முற்றாக
பாதிக்கப்பட்டு தற்போது அரசசார்பற்ற நிறுவனத்தின் நிதியுதவியுடன்
நிர்மாணிக்கப்பட்டு தனது சேவையை இப்பிராந்திய மக்களுக்கு வழங்கி வருகின்றது.

இவ்வைத்தியசாலைக்கு அரசசார்பற்ற நிறுவனத்தினால் வழங்கப்பட்ட சத்திர
சிகிச்சை கூட உபகரணங்கள், சலவை இயந்திரங்கள் என்பன சுகாதார திணைக்கள உயர் அதிகாரிகளின் அதிகார துஷ;பிரயோகத்தினால் வேறு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அபிவிருத்திச் சபையினர் என்னிடம் தெரிவித்தனர். 

எனக்கு இவை பற்றி உரிய முறைப்படி நேர காலத்தோடு
அறிவிக்கவில்லை. தற்போது உரிய முறைப்படி அறிவிக்குமிடத்து அதற்கு உரிய நிவாரணம் பெற்றுத்தரப்படும் எனவும் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :