பெண்கள் வீட்டை விட்டு வெளியேறினால் அவர்களை மானப்பங்கப்படுத்துங்கள்-முகமது அல் தாவூத்

பெண்கள் வீட்டை விட்டு வெளியேறினால் அவர்களை மானப்பங்கப்படுத்துமாறு சவூதி அரேபிய எழுத்தாளர் ஒருவர் ஆண்களை ஊக்குவித்து வருகிறார்.

சவூதி அரேபியாவைச் சேர்ந்த அப்துல்லா முகமது அல் தாவூத் என்ற எழுத்தாளர் பல நூல்களை எழுதியுள்ளார்.

அவருக்கு ட்விட்டரில் 97,000 பாலோயர்கள் உள்ளனர். இந்நிலையில் அவர் ட்விட்டரில் வெளியிட்ட கருத்தில், சவூதியில் உள்ள பலசரக்கு கடைகளில் பணியாற்றும் பெண்களை மானப்பங்கப்படுத்த ஆண்களை தூண்டிவிட்டு வருகிறார்.
அவ்வாறு மானப்பங்கப்படுத்தினால் தான் பெண்கள் வீட்டோடு இருப்பார்கள். அவர்களின் கற்பும் பாதுகாப்பாக இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார். இது நாட்டில் மேற்கத்திய கலாச்சாரத்தை புகுத்தும் அரசுக்கு எதிரான சிறந்த போராட்டம் என்று இதை சிலர் பாராட்டியுள்ளனர்.

சவுதியில் கடந்த 2011ம் ஆண்டில் இருந்து தான் பெண்கள் பொதுத் துறை நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. காலித் இப்ராஹிம் அல் சகாபி என்ற மத குரு எழுத்தாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் நல அமைச்சர் ஆண்களை விட்டுவிட்டு பெண்களுக்கு வேலைத் தேடிக் கொடுப்பதில் அக்கறையாக இருக்கிறார் என்று காலித் விமர்சித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :