எதிர்காலத்தில் செவ்வாய்க் கிரகத்திற்கு செல்லக்கூடிய விண்வெளி வீரர்கள் ஆபத்தை சந்திக்க நேரிடும்.


திர்காலத்தில் செவ்வாய்க் கிரகத்திற்கு செல்லக்கூடிய விண்வெளி வீரர்கள் கடுமையான கதிரியக்கத் தாக்கத்துக்கு உள்ளாக நேரிடும் என்று அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா எச்சரித்துள்ளது.

பாதுகாப்பு விதிமுறைகள் உடன்படும் அளவைவிட கூடுதலான அளவுக்கு அங்கு கதிர்வீச்சுத் தாக்கத்துக்கு விண்வெளி வீரர்கள் இலக்காக நேரிடும் என்று நாசா கூறுகிறது.

தொடர்புடைய விடயங்கள்

புவி வெப்பமடைதல்  உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய புற்றுநோய்களுக்கான அபாயத்தை அதிகரிக்கக்கூடிய அளவில் இந்த கதிர்வீச்சு இருக்கும் என்றும் விண்வெளி வீரர்களை நாசா எச்சரித்துள்ளது.

கியூரியாசிட்டி ரோவர் விண்ணூர்தியைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் மூலம் இதனை நாசா உறுதிப்படுத்தியுள்ளது.

செவ்வாயின் தரையில் ஊர்ந்துசென்று ஆய்வு நடத்திய ஒரு கார் அளவிலான இந்த ரோபோ- ஊர்தியை அங்கு கொண்டுசெல்லும் அரை-பில்லியன் கிலோமீட்டர் தூர பயணத்துக்கு 8 மாதங்களுக்கும் அதிககாலம் எடுத்துள்ளது.

இந்தப் பயணத்தை கிழமைகள் கணக்கில் விரைவு படுத்துவதற்கு போதுமான உந்துசக்திக்கான தொழிநுட்ப வசதி இன்னும் இல்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :