ஹிந்தி நடிகர் ஷாருக்கானுக்கு இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்த வரிசையில் இலங்கையில் 70 வயது சிரானி சமரசேகராவும் அவரது ரசிகர்களுல் ஒருவர்.
சிரானி கடந்த 15 வருடங்களாக ஷாருக்கானின் தீவிர ரசிகையாக இருக்கிறார். இவர் இந்த வயதிலும் ஷாருக்கின் புகைப்படங்களை அறை முழுவதும் ஒட்டிவைத்துள்ளார். அவர் படங்களை பல முறை தொடர்ந்து பார்த்து வருகிறார்.
ஷாருக்கான் மீது சிரானி பைத்தியமாக இருப்பதை அறிந்த அவரது மகன், தனது தாயின் 70 வது பிறந்தநாள் அன்று ஷாருக்கானை சந்திக்க வைத்து இன்ப அதிர்ச்சி அளிக்க விரும்பினர்.
இதற்காக அவர் ஷாருக்கானின் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு அனுமதி பெற்றார். இதைத் தொடர்ந்து கடந்த வாரம், ஷாருக்கை சந்திப்பதற்காக அவர் இலங்கையிலிருந்து தனது தாயார் சிரானி சமரசேகராவுடன் இந்தியா வந்தார்.
ஷாருக்கான் வீட்டின் அருகில் உள்ள ஒரு ஹோட்டலில் அவர்களின் சந்திப்பு நடந்தது. அப்போது ஷாருக்கான் தனது 70 வயது இலங்கை ரசிகையை சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்து அவருடைய பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார்.
அப்போது சிரானி தனது புகைப்படங்களை ஷாருக்கிடம் காண்பித்து அதில் கையெழுத்து பெற்றார். இந்த சந்திப்பு ஒருமணி நேரம் நீடித்தது.

0 comments :
Post a Comment