3ஆம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமியை 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் பாலியல் பலாத்காரம்.

புதுச்சேரியில் 3ஆம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடம் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியாங்குப்பம் அடுத்த மணவெளி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி தமிழ்செல்வி. இவரது கணவர் இறந்துவிட்டார். இவருக்கு நாராயணன் என்ற 10 வயது மகனும், சுமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 8 வயது மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் மணவெளியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.

நேற்று இரவு நாராயணன் தனது தங்கை சுமதியை அழைத்து கொண்டு கடைக்கு சென்றுள்ளார். அப்போது வழியில் அதே பகுதியை சேர்ந்த மணவெளி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் பிரகாஷ் என்ற மாணவன், நாரயணனையும் சுமதியையும் நிறுத்தி பேச்சு கொடுத்துள்ளான். பேச்சு வாக்கில் நாராயணனை மட்டும் கடைக்கு போக சொல்லிவிட்டு சுமதியை யாரும் இல்லாத மறைவிடத்திற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான் பிரகாஷ்.

இந்த சம்பவத்தை சுமதி அழுது கொண்டே தனது தாய் தமிழ்செல்வியிடம் கூறியிருக்கிறார். அதையடுத்து தமிழ்செல்வி அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் சிறுமி சுமதியை புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துவிட்டு பிரகாஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தையடுத்து சுமதியின் உறவினர்களும் அந்த பகுதி பொதுமக்களும், குற்றவாளிக்கு தகுந்த தண்டனை பெற்றுத் தர வேண்டும் என கோரி அரியாங்குப்பம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :