254 ஒட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் அவுஸ்திரேலியா களத்தில்.


சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிகெதிரான தீர்மானமிக்க போட்டியொன்றில் 254 ஒட்டங்கள் என்ற வெற்றியிலக்கு அவுஸ்திரேலிய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 253 ஒட்டங்களைப் பெற்றுள்ளது.

சர்வதேச ஒருநாள் போட்டி வரலாற்றில் இலங்கை அணிசார்பாக 11 ஆயிரம் ஓட்டங்களைப் பெற்ற வீரராக முன்னாள் அணித் தலைவர் மஹேல ஜயவர்தன இன்று பதிவானார்.இந்தப் போட்டியில் மஹேல ஜயவர்த்தன 84 ஓட்டங்களையும், லஹிரு திரிமான்ன 57 ஓட்டங்களையும் பெற்று அணியை வலுப்படுத்தினர்

அவுஸ்திரேலிய அணிசார்பாக மிச்சேல் ஜோன்சன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன், க்ளன் மெக்கே, ஜேம்ஸ் போக்னர் மற்றும் சேவியர் டோஹட்டி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்

இந்தப் போட்டியில் வெற்றிபெற்றால் மாத்திரமே அரையிறுதிக்கு தகுதி பெற முடியும் என்ற கட்டாயத்தில் இலங்கை அணி விளையாடிவருகின்றது.

நிகர ஓட்ட சராசரியில் குழுநிலையில் இறுதி இடத்தைப் பெற்றுள்ள அவுஸ்திரேலிய அணி பாரிய ஓட்ட வித்தியாசத்தில் இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால் மாத்திரம் அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் இலங்கை அணி தோல்வியடையும் பட்சத்தில் நியூசிலாந்து அணிக்கே அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்புகள் அதிகளவில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :