13ஆவது அரசியலமைப்பு திருத்தம் நீக்கம் அதிருப்தியளிப்பதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்

ட மாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் சில முக்கிய சரத்துக்களை நீத்துப்போகச் செய்ய இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமை அதிருப்தியளிப்பதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.

டில்லியில் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவினரை நேற்று சந்தித்தபோது இந்தியப் பிரதமர்
இதைத் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையானது 13ஆவது அரசியல் திருத்தத்திற்கு அப்பால் சென்று இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வழங்கப்படும் என
இந்தியா மற்றும் ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச சமூகத்திற்கு இலங்கை அளித்துள்ள வாக்குறுதி மீது சந்தேகத்தினை ஏற்படுத்துவதாக இந்தியப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

மாகாண ரீதியான அதிகாரப் பகிர்வின் அடிப்படையிலான அரசியல் தீர்வு குறித்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சிபாரிசுகளுக்கு இந்த நடவடிக்கை முரணாக அமைந்துள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.

இலங்கையில் தமிழர்கள் சம அந்தஸ்த்துடன் கௌரவமான வாழ்க்கை நடத்த வேண்டுமென இந்தியப் பிரதமர் வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், பி.செல்வராஜா, செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :